நஞ்சையும் புஞ்சையும் கொஞ்சி விளையாடும் தஞ்சைத் தரணியில் சமூக ஒற்றுமைக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழும் எங்கள் ஊர் 'திருப்பந்துருத்தி' இணைய உலகில் இப்போது அடியெடுத்து வைக்கிறது.

ஒற்றுமையுடனும் சகோதரத்துவத்துடனும் வாழும் முஸ்லிம்கள், இந்துக்கள், கிறித்தவர்கள் என எமதூர் மக்கள் அனைவருக்கும் சாதி மத பேதமின்றி சேவை செய்யும் நோக்கத்தில் இந்த வலைப்பதிவு உருவாக்கப்பட்டுள்ளது
திருப்பந்துருத்தி மண்ணில் பிறந்து திக்கெட்டும் பரந்து வாழும் எம் மண்ணின் மைந்தர்களை 'திருப்பந்துருத்தி' வலைப் பதிவு அன்புடன் வரவேற்கிறது.

தொடர்புக்கு-thiruppanthuruthi@gmail.com

வெளியூர் மரண அறிவிப்பு

நமதூர் பெரியப்பள்ளிவாசல் தெரு பாப்பு ஹஜ்ரத் அவர்களின் மகளும் அப்துல் மாலிக், முஹம்மது மன்சூர், முஹம்மது அத்ஹர் ஆகியோரின் சகோதரியும் ஆகிய பல்கீஸம்மா அவர்கள் இன்று 02-09-2010 வியாழக்கிழமை காலை வழுத்தூரில் இறையடிசேர்ந்தார்கள். இன்று இரவு 8 மணிக்கு நல்லடக்கம் செய்யப்பட்டது. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

கண்ணாடி பாப்பு அவர்கள் வஃபாத்

நமதூர் மெயின்ரோடு ஹலிகுல் ஜமால், முஹம்மது இஸ்மாயீல் , ஷாஜஹான் ஆகியோரின் தந்தையும் கண்ணாடி பாப்பு என அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டவருமான அல்ஹாஜ் அப்துல் ரஹ்மான் அவர்கள் இன்று 01-09-2010 புதன் அதிகாலை இறையடி சேர்ந்து விட்டார்கள். இன்று மாலை நல்லடக்கம் செய்யப்பட்டது. அன்னாரின் ஹக்கில் துஆச் செய்யுங்கள்

கண்ணா: வீடு கட்ட உதவும் இலவச மென்பொருள் - SWEET HOME 3D

கண்ணா: வீடு கட்ட உதவும் இலவச மென்பொருள் - SWEET HOME 3D

tntj July-4 Misra

அல்ஹாஜ் முஹம்மது கனி அவர்கள் வஃபாத்

நமதூர் மெயின் ரோட்டில் வசிக்கும் அப்துல் மூமின், அப்துல் ஹக்கீம், அப்துல் ஜமீல் ஆகியோரின் தந்தை 'லெப்பை' அல்ஹாஜ்  முஹம்மது கனி அவர்கள் இன்று அதிகாலை 4 மணி அவர்கள் வபாத்தாகிவிட்டார்கள். அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 4 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.
அவர்களின் பாவங்களை  அல்லாஹ் மன்னித்து சுவனபதியில் சேர்த்து வைப்பானாக.
                                   தொடர்புக்கு. அப்துல் ஜமீல்-9940757023

விமான விபத்திலிருந்து எப்படி தப்பலாம்..?


உலக உயிர்கள் எதனால் வாழ்கிறதோ தோன்றியதோ ,ஆனால் அனைத்தும் தக்கென பிழைத்தல் எனும் அடிப்படை தியரியை வைத்து தான் தோன்றின . தம்மை பாதுகாத்துக்கொள்ள , எச்சரிக்கையாக இருக்க தெரிந்த உயிர்கள் பிழைக்கும் வாய்ப்புகள் அதிகம் .

அண்மையில் நடந்த மேன்களூர் விமான விபத்தில் பல உயிர்களை தீ விழுங்கியது . அதில் அந்த விமானத்தை தவறவிட்டவர்களுடன் மொத்தம் 15 பேர் உயிர் தப்பினர் . உயிர்களின் பெறுமதி மதிப்பில்லை . அதில் ஒரு அறுபது பேராவது தப்பியிருந்தாலும் மகிழ்ச்சி தான் . நம் அரசியல்வாதிகள் அதிகாரிகளின் நோக்கம் முழுக்க யார் மீது யார் பழியை போட்டு பிழைக்கலாம் என்பதே .அது தான் இப்போதும் நடக்கிறது . அதனால் பயன் என்று பார்த்தால் ஒன்றும் இல்லை .

இனி எவ்வாறு இவ்வாறான விபத்துகளை எதிர் கொள்கிறோம் என்பதே முக்கியம் . இது குறித்து எவராலும் விழிப்புணர்வு நடவடிக்கை கொண்டு செல்லப்பட்டதாக காணவில்லை . விமானப்பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு அவசியம். 1 .2 மிலியன் விமானங்களுக்கு ஒன்று என விபத்து நடந்தாலும் எச்சரிக்கை மிகவும் முக்கியம் .


இதுவரை நடந்த அகோர விமான விமான விபத்துக்களில் இருந்து 56 % ஆன உயிர்கள் காப்பற்றப்பட்டிருக்கின்றன . சிலவை தவிர்க்கமுடியாதாயினும் உயிர் பிழைக்கும் விகிதத்தை எம் இறுதி நேர நடவடிக்கைகளால் அதிகரிக்கலாம்.

உங்கள் செல்போன் ஒரிஜினலா?


இந்திய அரசாங்கத்தால் கடந்த நவம்பர் மாதம் இறுதியோடு செல் போனில்  IMEI (International Mobile Equipment Identification) எண் இல்லாத அல்லது போலியான IMEI எண்களை உடைய போன்களுக்கான சேவை நிறுத்தப்படும் என்ற ஆணை பிறப்பிக்கப் பட்டது. ஆனால் இது எந்த அளவிற்கு செயல்படுத்தப் பட்டுள்ளது என்பதைப் பற்றிய தகவல் என்னிடம் இல்லை.

குறைந்த விலைக்கு அதக வசதிகளுடன் விற்பனைக்கு வருகின்ற சைனா மொபைல்களில் IMEI எண் போலியானதா என்கிற சந்தேகம் வருவது நியாமானதுதான். IMEI எண் என்பது குறிப்பிட்ட மொபைல் போன் தயாரிப்பாளர்களால் குறிப்பிட்ட மாடல் போன்களின் எண்ணிக்கை மற்றும் பயனாளர்களின் எண்ணிக்கையை கணக்கெடுக்க உருவாக்கப் பட்டதாக இருக்கலாம். இது 15 இலக்க எண்ணாகும்.  நமது செல்போனில் சரியான IMEI எண் உள்ளதா எனக் கண்டறிய என்ன செய்யலாம்.  

உங்கள் மொபைல் போனில் *#06# என டைப் செய்தால் உங்கள் போனிற்க்கான 15 இலக்க  IMEI எண் திரையில் வரும்.   இதை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். பிறகு IMEI என  டைப் செய்து ஒரு ஸ்பேஸ் விட்டு உங்கள் IMEI எண்ணை டைப் செய்து 53232 என்ற எண்ணிற்கு SMS செய்தால் Success என பதில் வந்தால் உங்கள் போன் ஒரிஜினல். 
ஒரு சில சமயங்களில் இது சரியாக வேலை செய்யாமல் போனால், இதை ஆன்லைனிலும் சோதிக்க சுட்டி கீழே தரப்பட்டுள்ளது. ஆன்லைனில் உங்கள் போனை குறித்த மேலதிக விவரங்களும் தெளிவாக தரப்படுகிறது. 

+ 2 தேர்வு முடிவுகள் ஒரு கண்ணோட்டம்

+ 2 தேர்வு முடிவுகள்
இந்த ஆண்டு பிளஸ் டூ தேர்வில் 85.2 சதவீத மாணவ, மாணவிகள் வெற்றி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டு தேர்ச்சி விகிதத்தைவிட அதிகமாகும்.
வழக்கம் போல இந்த ஆண்டும் மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 88 சதவீதமாகும். மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 81.9 சதவீதமாகும்.
1,187 மதிப்பெண்கள் பெற்று தூத்துக்குடி மாணவன் பாண்டியன் முதலிடம் பிடித்துள்ளார்.
1,186 மதிப்பெண் பெற்ற நாமக்கல் மாணவி சந்தியா,
கிருஷ்ணகிரி மாணவி காருண்யா, மாணவன் திணேஷ் ஆகியோர் 2வது இடம் பிடித்துள்ளனர்.
1185 மதிப்பெண்களுடன் விருதுநகர் பிரவக்ஷனா, ஈரோடு மனோசித்ரா, நாமக்கல் அபிநயா, அரியலூர் அன்டோ நதாரினி, செங்கல்பட்டு ஸ்ரீவித்யா ஆகியோர் 3வது இடத்தைப் பெற்றுள்ளனர்.
கம்ப்யூட்டர் அறிவியலிலும் தூத்துக்குடி மாணவர் பாண்டியனே 200 மதிப்பெண்களுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
தாவரவியலில் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை மாணவி ஜெனிஷா 200 மதிப்பெண்களுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
விலங்கியலில் கரூர் மாவட்டம் குளித்தலையைச் சேர்ந்த மாணவர் ஜெயனந்தா எட்வின் 200 மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்துள்ளார்.
புள்ளியியலில் ஈரோடு மாணவர் தீரஜ் 200 மதிப்பெண்களுடன் முதலிடத்தையும், புவியியலில் மதுரை மாணவி பரமேஸ்வரி 197 மதிப்பெண்களுடன் முதலிடத்தையும் பிடித்துள்ளனர்.
அனைத்துப் பாடங்களிலும் முதலிடத்தை ஒரு சென்னை மாணவர் கூட பெறாதது குறிப்பிடத்தக்கது. தலைநகரின் கல்வித் தரம் குறித்து பெரும் கேள்விக்குறிகளை இது ஏற்படுத்தியுள்ளது.

கல்கி அவதாரம் யார்?

கல்கி ஹிந்துக்களின் வேதாகமத்தில் சொல்லப்படும், கடைசி அவதாரமான கல்கி, இறைதூதர் அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மதாவார். 
இதை நான் சொல்லவில்லை, சமீபத்தில் ஹிந்தி மொழியில் வெளிவந்த புத்தகத்தின் சாராம்சமாகும். இந்த நூல் வெளியானபின், இந்தியாவே ஒரு கலங்கு கலங்கி விட்டது என்றால் மிகையல்ல. இதை ஒரு இஸ்லாமியர் எழுதியிருந்தால், அவர் இந்நேரம் சிறையிலடைக்கப்பட்டிருப்பதோடு, அந்த புத்தகத்தையும் தடை செய்திருப்பார்கள். ஆனால், கல்கி அவதாரத்தைப் பற்றிய இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு, “பிரபஞ்ச இறைத்தூதின் வழிகாட்டி” என்னும் இந்த புத்தகம், வங்காளத்தில் இருந்து வெளிவந்ததாகும். இது அலஹாபாத் பல்கலைக்கழகத்தில் ஒரு முக்கிய அத்தாட்சியாக இருக்கிறது. இதை எழுதியது, தலைசிறந்த ஆய்வாளரான பண்டிட் வைத் ப்ரகாஷ் என்னும், ஒரு பிராமண சமஸ்கிருத பண்டிட்டாவார். பண்டிட் வைத் ப்ரகாஷ, பன்னெடுங்கால கடின ஆராய்ச்சி மற்றும் அயரா உழைப்பில் உருவான இப்புத்தகத்தை, இதே போல ஆய்வு செய்யும் எட்டு கல்விமான்களிடம் சமர்ப்பித்து இருக்கிறார். அவர்களும், முழுக்க இப்புத்தகத்தை படித்துணர்ந்து, பலமான ஆதாரங்களினால், இப்புத்தகத்தின் தகவல், முழுக்க முழுக்க உண்மை தான் என்று சான்றளித்துள்ளனர். 
இந்தியாவின் தலைச்சிறந்த வேதங்கள், குறிப்பிடும் தூதரும் வழிகாட்டியுமான கல்கி அவதாரம், மக்காவில் பிறந்த முஹம்மது என்னும் மாமனிதரே ஆவார். ஆதனால், ஹிந்துக்கள், இனியும் கல்கி அவதாரத்துக்காக காத்திராமல், ஆயிரத்து நானூறு வருடங்களுக்கு முன்பு, இவ்வுலகில் உதித்து, இறைத்தூதை எத்தி வைத்து, வாழ்வின் இறுதிவரை இறைபணியாற்றிய இறைவனின் கடைசி தூதரை ஏற்று இஸ்லாத்தைத் தழுவ வேண்டும். இவரது ஆராய்ச்சியின் இறையாண்மையை நிரூபிக்க, பண்டிட், தம் வேதத்திலிருந்து தக்க சான்றுகளை முன்வைக்கிறார்.
1.வேதங்கள், கல்கி அவதாரம் தான், பகவானின் இறுதித் தூதர் என்கிறது. இது, கடைசி தூதர், முஹம்மதுடைய விஷயத்தில் மட்டுமே சரியாக இருக்க முடியும். 

2.ஹிந்து வேதங்களின் முன்னறிவிப்பின் படி, கல்கி நீரினால் சூழப்பட்ட ஒரு இடத்தில் தான் அவதாரம் எடுப்பார். அது தான் ‘ஜஸீரத்துல் அரப்’ என்று சொல்லக் கூடிய கடலால் சூழப்பட்ட அரேபிய தீபகற்பமாகும். 

3.ஹிந்து புனித நூல்களில், கல்கி அவதாரத்தின் தந்தையை, விஷ்னு பகத் என்றும் தாயை சொமானிப் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. சமஸ்கிருதத்தில் விஷ்னு என்றால், இறைவன், அதாவது அல்லாஹ் என்று பொருள். அதோடு, பகத் என்றால் அடிமை என்று அர்த்தம். ஆக, விஷ்னு பகத் என்பது, அல்லாஹ்வின் அடிமை அதாவது அரபியில், அப்துல்லாஹ் என்னும் பதத்தைத் தருகிறது. சொமானிப் என்ற சமஸ்கிருத வார்த்தைக்கு, சாந்தமான அமைதி என்று பொருள். அரபியில் ஆமினா என்ற வார்த்தைக்கும் இதே அர்த்தம் தான். ஆக, இறுதித் தூதர் முஹம்மதின் பெற்றோர் அப்துல்லாஹ் மற்றும் ஆமினா என்பது, உறுதிப்படுகிறது. 

4.அதோடு, கல்கி அவதாரம், ஆலிவ் மற்றும் பேரித்தங்கனிகளை உண்டு வாழ்வார் என்றும், வார்த்தை தவறாத நேர்மையாளராக இருப்பார் என்றும் ஹிந்துக்களின் புத்தகங்களில் உள்ளது. ஆக, இது முஹம்மதின் விஷயத்தில் உண்மையாகிறது என்பதாக பண்டிட் ப்ரகாஷ் எழுதுகிறார். 

5.கல்கி அவதாரம் உயர்ந்த மதிப்பு மிக்க குலத்தில் பிறப்பார் என்று வேதங்கள் சொல்கின்றன.. இதுவும், மிக உயரிய, மதிப்புமிக்க குறைஷி குலத்தில் பிறந்ததால், முஹம்மதுடைய விஷயத்தில் சரியாகிறது. 

6.கல்கி அவதாரத்துக்கு, ஒரு குகையில் இறைவனின் ஏவலர் மூலமாக ஞானம் கிடைக்கும் என்பதாக வந்துள்ளது. ஆக, மக்காவிலேயே, அல்லாஹ்வின் தூதர் ஜிப்ரீல் மூலமாக ஹீரா குகையில் ஞானம் பெற்றது முஹம்மது ஒருவர் தான்.

7.மேலும், கல்கி அவதாரத்துக்கு காற்றின் வேகத்தில் பறக்கும் குதிரை வழங்கப்படுமென்றும், அதன் மூலம் அவர், இவ்வுலகத்தையும், ஏழு வானத்தையும் சுற்றி வருவார் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ‘மிஃராஜ்’ இரவில், ‘புராக்’ வாகனத்தில் தூதர் முஹம்மது பயணமானது, இதைத்தானே சொல்கிறது? 

8.அதோடு, கல்கி அவதாரத்துக்கு இறைவனின் உதவி பெருமளவில் இருக்கும் எனவும், இறைவனால் வலுவூட்டப்படுவார் எனவும் புத்தகங்களில் வந்துள்ளது. முஹம்மதுக்கு, பத்ரு போர்க்களத்தில், இறைவனின் உதவி நேரடியாக தன் ஏவலர்கள் மூலம் இறங்கியது நம் எல்லாருக்கும் தெரிந்த விஷயம் தான். 

9.மேலும் சில விஷயங்கள் வேதங்களில் குறிப்பிடப்படுகின்றன. அதாவது, கல்கி அவதாரம், குதிரையேற்றத்திலும், அம்பெய்துவதிலும், வாள் பயிற்சியிலும் சிறந்து விளங்குவார்.. இந்த இடத்தில், பண்டிட் வைத் ப்ரகாஷ் என்ன சொல்கிறார் என்பது, அதி முக்கியமான, கவனத்தில் கொள்ளத் தக்க விஷயமாகும். அதாவது, குதிரை, வாள் மற்றும் ஈட்டிகளின் காலம் வெகு நாட்களுக்கு முன்பே போய் விட்டது, தற்போது, நவீன ஆயுதங்களான, துப்பாக்கிகள், பீரங்கிகள், ஏவுகணைகள் என போர்முறை முற்றிலும் மாறி விட்டது. அதனால், வாளுடனும் வில்லுடனும் போராடக்கூடிய கல்கி இனிமேல் அவதாரமெடுப்பார் என்று இனியும் நம்பிக்கொண்டிருப்பது அர்த்தமற்றது. உண்மையில், வேதங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் கல்கி அவதாரம் என்பது, புனித குர்ஆன் வழங்கப்பட்ட தூதர் முஹம்மதேயன்றி வேறில்லை என்பது மிகத் தெளிவாக தெரிகிறது. பேராசிரியர் பண்டிட் வைத் ப்ரகாஷ் எழுதியதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தது மீர் அப்துல் மஜீத். தமிழ் மொழி பெயர்ப்பு: சகோதரி ஸுஹைநா (சுமஜ்லா)

Toll Free Phone Numbers in India

Airlines
Indian Airlines -1800 180 1407
Jet Airways - 1800 22 5522
Spice Jet - 1800 180 3333
Air India -- 1800 22 7722
Kingfisher - 1800 180 0101
============ ========= ========= =====

 Banks
ABN AMRO -1800 11 2224
Canara Bank - 1800 44 6000
Citibank - 1800 44 2265
Corporation Bank - 1800 443 555
Development Credit Bank - 1800 22 5769
HDFC Bank - 1800 227 227
ICICI Bank - 1800 333 499
ICICI Bank NRI - 1800 22 4848
IDBI Bank - 1800 11 6999
Indian Bank - 1800 425 1400
ING Vysya - 1800 44 9900
Kotak Mahindra Bank - 1800 22 6022
Lord Krishna Bank - 1800 11 2300
Punjab National Bank - 1800 122 222
State Bank of India - 1800 44 1955
Syndicate Bank - 1800 44 6655
============ ========= ========= =====

சிறு நீரகக் கல்... கத்தியின்றி ரத்தமின்றி ஒரு சிகிச்சை‏

இன்றைய இளைஞர்களும் நடுத்தர வயதுக்காரர்களும் பெரிதும் பாதிக்கப்படும்
ஒரு விஷயம் சிறு நீரகக் கல்.

இருபது வயது இளைஞர்கள் கூட இந்த பிரச்சனையில் சிக்கி அவதிப்படுகின்றனர்.

இதற்கு, கத்தியின்றி ரத்தமின்றி ஒரு சிகிச்சை இருக்கிறது. அது எலுமிச்சை!

ஆம்... எலுமிச்சைச் சாறு பருகுவதால் சிறுநீரகத்தில் கற்கள் உருவாவது
தடுக்கப்படுகிறது. இது ஏதோ குருட்டுத்தனமான வாதமல்ல. 100 சதவிகிதம்
ஆராய்ச்சி மூலம் நிரூபிக்கப்பட்டுள்ள உண்மை!

அமெரிக்காவின் சான் டியாகோ கிட்னி ஸ்டோன் சென்டரின் இயக்குநர் ரோஜர் எல்
சர் என்பவர் இதனை நிரூபித்துள்ளார்.

சிறுநீரகத்தில் கல் உருவாகாமல் தடுக்க மொத்தம் ஐந்து வழிகள் உள்ளனவாம்.
அதில் முக்கியமானது எலுமிச்சைச் சாறு அதிகமாகப் பருகுவது.

மருந்து வாங்கும்போது கவனம் தேவை


மருந்துகளை உரிமம் பெற்ற சில்லரை மருந்து கடைகளில் மட்டுமே வாங்க வேண்டும். மருத்துவரின் சீட்டின் அடிப்படையில் அதில் குறிப்பிட்டுள்ள மருந்துகளை மட்டுமே வாங்க வேண்டும்.

* வாங்கிய மருந்துகளுக்கு கடைக்காரர்களிடமிருந்து விற்பனையின் ரசீது கேட்டு பெறவும். இது போலி மருந்துகளிடமிருந்து உங்களுக்கு கிடைக்கும் உத்திரவாதமாகும்.

* மருந்துகளை வாங்கியவுடன் அதன் தொகுதி எண், உற்பத்தி எண், காலாவதியாகும் தேதி ஆகியவற்றை நன்கு கவனிக்க வேண்டும். அதில் ஏதாவது தவறுகள் ஏற்பட்டிருந்தால் உரிய அதிகாரிகளிடம் புகார் செய்ய வேண்டும்.

* மருந்துகளின் மேல் குறிப்பிட்டுள்ள விலையையும், பில்லில் போடப்பட்டுள்ள விலையையும் ஒப்பிட்டு பார்த்து தவறுகள் இருப்பின் உரிய அதிகாரிகளிடம் புகார் செய்ய வேண்டும்.

* மருந்துகளை குளிர்ந்த, வெளிச்சம், இல்லாத உலர்ந்த இடத்தில் வைக்கவும். மருந்துகளை குழந்தைகளுக்கு எட்டாத உயரத்தில் வைக்கவும்.

* மருந்துகளை சமையல் அறை, குளியல்அறையில் உள்ள அலமாரிகளில் வைக்காதீர்கள்.

* மற்றவரின் நோயின் தன்மை உங்களது போன்று இருந்தாலும் நீங்கள் உபபோகப்படுத்தும் மருந்துகளை அவர்களுக்கு கொடுக்காதீர்கள்.

* மருத்துவரின் சீட்டின் அடிப்படையில் அதில் குறிப்பிட்டுள்ள மருந்துகளுக்கு மாற்றாக வேறு மருந்துகளை வாங்காதீர்கள்.

இது பற்றிய சந்தேகம் உள்ளவர்கள், சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள மருந்துகள் மற்றும் மருந்தியல் விழிப்புணர்வு மையத்தை அணுகலாம். மேலும் 044 24338421 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
 மருந்து கட்டுப்பாடு உதவி இயக்குநர் மண்டல அலுவலக தொலைபேசி எண்கள் வருமாறு, 
மண்டலம் (1) 24328734, 
மண்டலம் (2) 24310687, 
மண்டலம்(3) 24351581.


------------------------------------------------------------------------------------------
நன்றி- அதிரை எக்ஸ்பிரஸ்

2011ம் ஆண்டுக்கான மக்கள் தொகைக் கணக்கெடுப்பு தொடங்கியது

டெல்லி : 2011ம் ஆண்டுக்கான மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் பணிகள் இன்று தொடங்கின. முதல் நபராக குடியரசுத் தலைவர் [^] பிரதீபா பாட்டீலிடம் மக்கள் தொகைக் கணக்கு விவரம் எடுக்கப்பட்டது.

கிட்டத்தட்ட 100 கோடி மக்களைக் கொண்ட இந்தியாவில் மாபெரும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு இன்று தொடங்கியது. இந்த பிரமாண்டப் பணியில் 25 லட்சம் அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

நாடு முழுவதும் வீடு வீடாக சென்று மக்கள் தொகைக் கணக்கெடுப்பாளர்கள் இப்பணியை மேற்கொள்ளவுள்ளனர்.

ஒவ்வொரு பத்து ஆண்டுக்கு ஒரு முறை சென்சஸ் எடுக்கப்படுகிறது. இந்த ஆண்டு எடுக்கப்படும் கணக்கெடுப்பு பயோமெட்ரிக் முறையில் மேற்கொள்ளப்படுகிறது. 15 வயதுக்கு மேற்பட்டோர் குறித்த தகவல்களை சேகரிப்பதோடு அவர்களது கைரேகையும் பதிவு செய்ய்படும். புகைப்படமும் எடுக்கப்படும்.

தஞ்சை மாவட்டத்தில் 3G சேவை தொடக்கம்


மூன்றாம் தலைமுறை தொழில்நுட்பம் எனப்படும் 3G தொலைதொடர்புசேவை தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களைச் சேர்ந்த BSNL வாடிக்கையாளர்களுக்கு நேற்று (31ம் தேதி) முதல் வழங்கப்பட்டன.

இதன்தொடக்க விழா நேற்று தஞ்சாவூரில் நடந்தது. துணை பொது மேலாளர் இருதயராஜ் வரவேற்றார். தஞ்சை தொலைதொடர்பு மாவட்ட பொது மேலாளர் ராஜாரெட்டி 3G சிம்கார்டின் முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். இந்திய மருத்துவக் கழக தஞ்சைகிளை தலைவர் சிங்காரவேலு பெற்றுக்கொண்டார்.


தஞ்சை தொலை தொடர்பு மாவட்டத்தில் ஏற்கனவே 2G சேவை இயங்கி வருகிறது. இந்நிலையில் வாடிக்கையாளர்கள் நலன் கருதி 3G சேவை நேற்று தொடங்கி வைக்கப்பட்டது.

தமிழ்நாட்டுப் பழமொழிகள்

வளைகுடா செந்தமிழ்ச் சங்கம் (வசெந்தம்) குழுமத்தில் நண்பர் சீ.ந.ராஜா எடுத்துவைத்த தமிழ்நாட்டு பழமொழிகள்:
 
ஒரு ஆவணச் சேமிப்பின் எண்ணத்தில் இங்கு பதிகிறேன்.
 
தமிழ்நாட்டுப் பழமொழிகள் 

அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.
அச்சாணி இல்லாத தேர், முச்சானும் ஓடாது.
அறிவாளிகள் கூட்டம் உயிருள்ள நூல் நிலையம்.
அசையாத மணி அடிக்காது
அலங்காரம் இல்லாமல் அழகு இருப்பதில்லை.
அரண்மனை வாயிற்படி அதிகமாக வழுக்கும்.
அறுகல் கட்டையும் ஆபத்திற்கு உதவும்.
அழகும், மணமுள்ள பூக்களும் சாலையோரத்தில் வாழாது.
அறிவின் அடையாளம் இடைவிடா முயற்சி.
அதிர்ஷ்டம் அயர்ந்த நித்திரையிலும் வரும்.
அழகுள்ள பெண்ணையும் கிழிந்த ஆடையையும் யாரேனும் பிடித்து இழுத்து விடுவார்கள்.
அமைதி சாந்தத்தை உருவாக்கும். செல்வம் பெயரை உண்டாக்கும்.
அழகு வல்லமை உடையது. பணம் சர்வ வல்லமை உடையது.
அலை அடித்தால் பிரார்த்தனை துவங்கும். கரை சேர்ந்தால் பிரார்த்தனை நீங்கும்.
அதிர்ஷ்டம் ஒருவனுக்குத் தாய். மற்றவனுக்கு மாற்றாந்தாய்.
அழகான பெண் தலைவலி, அழகற்றவள் வயிற்றுவலி.
அழகும் மடமையும் பழைய கூட்டாளிகள்.
அடுப்பங்கரையில் கற்றதையெல்லாம் பிள்ளை பேசும்.
அறிவார் ஐயம் கொள்வார்; அறியார் ஐயமே கொள்ளார்.
அரைத்துளி அன்புகூட இல்லாமல் ஆயிரம் சட்டங்கள் இயற்றலாம்.
அன்பே கடவுள்.
அன்பு மெலிந்து போனால், தவறு தடியாகத் தெரியும்.
அதிகப் பணப்புழக்கம் இளைஞனைக் கெடுக்கும்.
அசட்டுத் தனங்கள் எண்ணிலடங்காதவை; அறிவு ஒன்றே ஒன்றுதான்.
அடிப்பதும் அடிபடுவதும்தான் வாழ்க்கை.
அரை குறை வேலையை முட்டாளிடம் காட்டாதே!
அண்டை அயல் தயவு இன்றி எவரும் வாழ முடியாது.
அன்பும், மனைவியும் அமைவதே வாழ்க்கை.
அறிவாளிகள் கடிதங்களை ஆரம்பத்திலிருந்தே படிப்பார்கள்.
அழகு, அடைத்த கதவுகளை திறக்கும்.
அதிகப் பேச்சும், பொய்யும் நெருங்கிய உறவினர்.
அதிகப் பணிவும் அகம்பாவம் ஆகலாம்.

போலி மருந்துகள்: மக்கள் உஷார் அடைவது எப்படி? மருத்துவ நிபுணர் யோசனை

போலி-காலாவதியான மருந்துகளை பொது மக்கள் தவிர்ப்பதில் கவனமாக இருக்க வேண்டும் என்று நெஞ்சக நோய் மருத்துவ நிபுணர் ​ ​செ.நெ.​ தெய்வநாயகம் கூறினார்.
உடல் நலக் குறைவு ஏற்படும் நிலையில் மருத்துவரின் பரிந்துரையின்றி நேரடியாக மருந்துக் கடைக்காரரிடம் மருந்து வாங்கிச் சாப்பிடாமல் இருத்தல்,​​ நோய்க்கான காரணத்தை மருத்துவரிடம் ​ முழுமையாகக் கேட்டுத் தெரிந்து கொள்ளுதல்,​​ சிகிச்சைக்கு டாக்டர் பரிந்துரைக்கும் மாத்திரைகள் குறித்த விவரம்,​​ பிரபலமான-தரமான மருந்துக் கடைகளில் மட்டுமே மருந்துகளைத் தொடர்ந்து வாங்குதல்,​​ உடனடியாக நிவாரணம் ​பெற நினைத்து அதிக அளவுக்கு மருந்துகள் சாப்பிடுவதைத் தவிர்த்தல் ஆகியவற்றை பொதுமக்கள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:
​''வைரஸ்,​​ பாக்டீரியா காரணமாக ஜலதோஷம் ஏற்பட வாய்ப்பு உண்டு.​ வைரஸ் காரணமாக மூக்கு,​​ சைனஸ்,​​ தொண்டைப் பகுதியில் ஏற்படும் ஜலதோஷம் மருந்துகள் ஏதும் இன்றி இயல்பாக சரியாகி விடும்.​ குறிப்பாக குழந்தைகளுக்கு ஆண்டுக்கு ஆறு முறை இத்தகயை ஜலதோஷம் ஏற்படுவது இயல்பானது.​
ஆனால், ​​ பயம்-அறியாமை காரணமாக பல பெற்றோர் ஆன்டிபயாட்டிக் மருந்துகளை குழந்தைக்குக் கொடுத்து குழந்தையின் நோய் எதிர்ப்புச் சக்திக்கு பாதிப்பு ஏற்படுத்துகின்றனர். மார்புச் சளி,​​ ஒவ்வாமைச் சளி ஆகியவற்றுக்கு சிகிச்சை தேவைப்படும்.​

தஞ்சை வடக்கு மாவட்டத்தில் ஆம்புலன்ஸ் சேவை துவக்கம்.




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டத்தில் ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டது. தஞ்சை வடக்கு மாவட்டம் ராஜகிரி - பண்டாரவாடை கிளை இந்த ஆம்புலன்சை மாவட்டத்திற்கு அர்ப்பணிப்பு செய்ததது. இச்சேவை 08.03.10 திங்கட்கிழமை முதல் செயல்பட துவங்கியது.  
ஆம்புலன்ஸ் தேவைப் படுவோர்  தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்: 
A.S.அலாவுதீன் (மாவட்ட தலைவர்) -9944037171, 
H.சர்புதீன் (மாவட்ட செயலாளர்) -9894669958,  
Z.முஹம்மது நுஃமான் (மாவட்ட பொருளாளர்) -9791751497.
_______________

தஞ்சை மாவட்டத்தில் நாளை முதல் மின் விநியோக நேரத்தில் மாற்றம்

  ​ தஞ்சாவூர்,​​ கும்பகோணம்,​​ பட்டுக்கோட்டை,​​ ஒரத்தநாடு,​​ பேராவூரணி,​​ அதிராம்பட்டினம்,​​ பாபநாசம்,​​ திருக்காட்டுப்பள்ளி,​​ மதுக்கூர் ஆகியப் பகுதிகளில் மார்ச் 1 ஆம் தேதி முதல் மின் விநியோக நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார் மின் வாரிய மேற்பார்வை பொறியாளர் மா.​ தங்கராஜு. ​ ​ 
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ​ ​ கும்பகோணம் பகுதி:​ மேலக்காவிரி பகுதியில் காலை 6 முதல் 8 மணி வரை,​​ 

மகாமகம்,​​ டி.எஸ்.ஆர்.​ பாபநாசம்,​​ ஆடுதுறை பகுதிகளில் காலை 8 முதல் 10 மணி வரை,​​ 

அய்யம்பேட்டை பகுதியில் பிற்பகல் 2 முதல் 4 மணி வரை,​​ 

கும்பகோணத்தில் காந்திநகர்,​​ சுந்தரபெருமாள் கோயில்,​​ வாட்டர் ஒர்க்ஸ்,​​ திருபுவனம் பகுதிகளில் மாலை 4 முதல் 6 மணி வரை,​​ 

பட்டுக்கோட்டை,​​ ஒரத்தநாடு பகுதிகளில் காலை 6 முதல் 8 மணி வரை,​​ 

அதிராம்பட்டினம் பகுதியில் காலை 10 முதல் பகல் 12 மணி வரை,​​ 

பேராவூரணி பகுதியில் பிற்பகல் 2 முதல் 4 மணி வரை,​​ 

மதுக்கூர் பகுதியில் மாலை 4 முதல் 6 மணி வரை மின் தடை செய்யப்படுகிறது.

​ தஞ்சாவூர்:​ திருவையாறு மற்றும் செங்கிப்பட்டி பகுதியில் காலை 6 முதல் 8 மணி வரை,​​ 

அன்னை சத்யா விளையாட்டு மைதானம்,​​ சுற்றுலா மாளிகை,​​ திருக்கானூர்பட்டி பகுதிகளில் காலை 8 முதல் 10 மணி வரை,​​ 

வல்லம் பகுதியில் காலை 10 முதல் பகல் 12 மணி வரை,​​ 

பூக்குளம் பகுதியில் பகல் 12 முதல் பிற்பகல் 2 மணி வரை,​​ 

விளார்,​​ முனிசிபல்,​​ இண்டஸ்டிரியல் திருக்காட்டுப்பள்ளி பகுதிகளில் பிற்பகல் 2 முதல் மாலை 4 மணி வரை,​​ 

கரந்தை,​​ வ.உ.சி.​ நகர்,​​ கீழவாசல்,​​ வண்டிக்காரத் தெரு பகுதிகளில் மாலை 4 முதல் 6 மணி வரை மின் தடை செய்யப்படுகிறது.

பட்ஜெட் 2010-11: முக்கிய அம்சங்கள்

டெல்லி: நாடாளுமன்றத்தில் இன்று நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தாக்கல் செய்து வரும் பட்ஜெட் உரையின் முக்கிய அம்சங்கள்:

-ஆன்லைன் செய்தி நிறுவனங்களுக்கு சேவை வரி அதிகரிப்பு

-ரூ. 15 லட்சத்துக்கு மேல் வருமானம் ஈட்டும் நிறுவனங்களுக்கு கட்டாய ஆடிட்

-கூடுதலாக பல சேவைகளுக்கும் வரிகள் விதிக்கப்படும்

-விவசாய விதைகள் மீதான வரி முழுமையாக விலக்கு

(பட்ஜெட்டுக்கு இந்திய பங்குச் சந்தையில் வரவேற்பு, பங்கு விலைகள் உயர்வு)

-டிவி, ஃபிரிட்ஜ், ஏசி விலையும் உயருகிறது

-தங்கம் மற்றும் வெள்ளிக்கான இறக்குமதி வரி அதிகரிக்கப்படுகிறது.

-மோனோ ரயில்களுக்கு இறக்குமதி திட்ட அந்தஸ்து

-சிடி விலை குறையும்

-பெட்ரோலிய கச்சா எண்ணெய் மீது மீணடும் 5 சதவீத கலால் வரி

-இறக்குமதி செய்யப்படும் தங்கத்திற்கு 10 கிராமுக்கு ரூ. 300 சுங்க வரி விதிக்கப்படும். இதனால் தங்க நகை விலை உயரும்.

-அதிகபட்ச சுங்க வரி 10 சதவீதமாக இருக்கும்

-பெட்ரோல், டீசல் விலை உயரும்

-பெரிய கார்களுக்கு சுங்க வரி 22 சதவீதமாக உயர்வு

-(பெட்ரோலிய பொருட்கள் மீதான கூடுதல் வரியை கண்டித்து எதிர்க் கட்சிகள் வெளிநடப்பு)

--பெட்ரோலிய பொருட்கள் மீதான சுங்க வரி லிட்டருக்கு 1 ரூபாய் அதிகரிப்பு (இதனால் பெட்ரோல்-டீசல் விலை அதிகரிக்கும். இதை கண்டித்து எதி்ர்க் கட்சிகள் அமளி)

-கலால் வரி 8 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக அதிகரிப்பு

-கார்பரேட் நிறுவனங்கள் மீதான கூடுதல் வரி குறைப்பு

-சிகரெட் மீதான சுங்க வரி அதிகரிப்பு

-இந்த வருமான வரி சலுகையால் ரூ. 26,000 கோடி இழப்பு ஏற்படும்

-நீண்டகால அடிப்படைக் கட்டமைப்புத் திட்ட பத்திரங்களில் முதலீடு செய்தால் ரூ. 20,000 முதலீடு செய்தால் வரி சலுகை கிடைக்கும்

-இந்த புதிய வருமான வரி சலுகை மூலம் 60 சதவீத வருமான வரி செலுத்துவோர் பயன் பெறுவர்.

-ஆண்டுக்கு ரூ. 1.6 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு முழு வருமான வரி விலக்கு தொடரும்

-ரூ. 1.6 லட்சம் முதல் ரூ. 5 லட்சம் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு வரி 10 சதவீதமாக இருக்கும். (இதுவரை ரூ. 3 லட்சத்துக்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு 20 சதவீத வருமான வரி இருந்தது.)

-ரூ. 5 லட்சத்தி்ல் இருந்து 8 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு வருமான வரி 20 சதவீதம்

-ரூ. 8 லட்சத்துக்கு மேல் வருட வருமானம் உள்ளவர்களுக்கு வரி 30 சதவீதமாக தொடரும்

-பாதுகாப்புத்துறைக்கான நிதி ஒதுக்கீடு ரூ. 6,000 கோடி அதிகரிப்பு

-உணவுப் பற்றாக்குறையை தனியார் துறை உதவியோடு வெல்வோம்

-பாதுகாப்புத் துறைக்கு ரூ. 1.47 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு

-ஒருங்கிணைந்த தேசிய அடையாள அட்டை திட்டத்துக்கு ரூ. 1900 கோடி

-இந்த ஆண்டு நிதிப் பற்றாக்குறை 5.5 சதவீதமாக உள்ளது

-திட்ட செலவுகள் 15 சதவீதம் அதிகரித்துள்ளது

-மொத்த வரி வருமானம் ரூ. 7.46 லட்சம் கோடியாக இருக்கும்

-பெண் விவசாயிகள் நலத் திட்டத்துக்கு ரூ. 100 கோடி
---------------------------------
நன்றி-ThatsTamil
 

ஹார்ட் அட்டாக்கும் முதல் உதவிகளும்.


ஹார்ட் அட்டாக்கும் முதல் உதவிகளும்.

டாக்டர் A. ஷேக் அலாவுதீன்
MD., (Chin.Med), A.T.C.M (CHINA)
Zhejiang University, Hangzhou, (China)
(Chinese Traditional Medicine).
ஹார்ட் அட்டாக் இந்த வார்த்தையே பயத்தை உண்டாக்கும், இதனால் ஏற்படும் பதட்டமோ பிரச்சனையை அதிகமாக்கும். நிதானமாக இக்கட்டுரையில் இருப்பது போல் செயல்பட்டால் ஹார்ட் அட்டாக்கிலிருந்து மிகவும் எளிதாக விடுபடலாம். (இன்ஷா அல்லாஹ்).
இதயம் இதன் அழகிய துடிப்புகளின் ஏற்ற இறக்கமே நோய்களின் விளக்கம். துடிப்புகளின் மவுனம் அதுதான் மரணம். இறைவன் நம்உடல் இயக்கத்திற்காக அளித்த ஓர் அற்புத தொழிற்சாலை. இதயம் அது தானாக இயங்குவதில்லை உடல் உறுப்புகள் பாதிப்பு அடையும் போது அவை தன் நிலையை மூளைக்கு தெரிவிக்க மூளை இதயத்திற்கு உத்திரவிடுகின்றது. இதயம் இரத்த ஓட்டம் மூலம் பாதிக்கப்பட்ட உறுப்புக்கு சக்திஅளித்து அதன் சக்தியை சமநிலைப்படுத்தி உறுப்பை சீராக இயங்க வைக்கின்றது. பாதிப்படைந்த உறுப்பு அனுப்பும் தகவல் இதயத்திற்கு கிடைக்காமல் போனாலோ, இதயத்திற்கு தகவல் கிடைத்து இரத்தத்தை (சக்தியை) அனுப்பும்போது தடங்கல் ஏற்பட்டாலோ (இரத்த குழாய் அடைப்பு போன்ற காரணங்களால்) பல உறுப்புகள் பாதிப்படைந்த நிலையில் குறிப்பிட்ட ஒரு உறுப்புக்க போதுமான இரத்தத்தை அனுப்ப முடியாமல் போனாலே ஹார்ட் அட்டாக் ஏற்படுகிறது.
ஆனால் நவீன மருத்துவத்தில் இதயம் தானாகவே இயங்குவதாக நினைத்து அதன் வேகத்தைக் குறைக்க மருந்து, மாத்திரைகள் கொடுத்து நன்றாக இருக்கும் இதயத்தை அநியாயமாக கெடுத்துவிடுகின்றனர்.

நுரையீரல், பெருங்குடல், வயிறு, மண்ணீரல், இதயம், சிறுகுடல், சிறுநீரகம் (கிட்னி), சிறுநீர் பை, பித்தப்பை மற்றும் கல்லீரல் போன்றவைகள் மிக மிக முக்கியமான உடல் உறுப்புகள். மற்றவை அனைத்தும் இந்த உறுப்புகளை சார்ந்தவையே. இந்த உறுப்புகள் எவ்வாறு இதயத்தோடு சம்பந்தப்படுகிறது என்பதையும் எந்தெந்த உறுப்பு பாதிப்படைந்தால் எந்தெந்த நேரத்தில் ஹார்ட் அட்டாக் வரும், எந்த சூழ்நிலைகள் மற்றும் சந்தற்பங்களில் வரும் இதற்கான முதல் உதவி முறைகள் என்ன? எப்படி செய்வது என்பதை இன்ஷா அல்லாஹ் இத்தொடரில் நாம் தெரிந்துகொள்வோம்.

பணம் பறிக்க தூண்டில் போடும் இமெயில்கள்

இமெயில்கள் வழியாகப் பணம் பறிக்க மொத்தமாக அனுப்பப்படும் மெயில்கள் குறித்துப் பல முறை தகவல்களைத் தந்துள்ளோம். சென்ற வாரம் தகவல் தொடர்பு குற்றங்களைக் கண்காணிக்கும் சென்னை சைபர் கிரைம் செல் அலுவலகத்திலிருந்து வந்த ஒரு கடிதம், இன்னும் இது போல பலர் ஏமாற்றமடைவதை உறுதிப் படுத்தியுள்ளது. ஏமாறும் பலரில், விரல் விட்டு எண்ணக் கூடிய சிலரே காவல் நிலையத்தில் புகார் அளிக்கின்றனர். தாங்கள் ஏமாந்தது தெரிந்தால் தங்களுக்கு அவமானம் என்று கருதி பலர் வெளியே சொல்லாமலே இருந்துவிடுகின்றனர். பணம் பறிக்கத் தூண்டில் போடும் இமெயில்கள் இங்கு வகைப்படுத்தி பட்டியலிடப்பட்டுள்ளன. இன்டர்நெட் மற்றும் இமெயில்களைப் பயன்படுத்துவோர் கவனமாக இவற்றைத் தவிர்க்குமாறு காவல்துறையும் கேட்டுக் கொண்டுள்ளது. இன்னும் புதுவிதமான வழிகளில் யாருக்கேனும் மெயில்கள் வந்தாலோ அல்லது தாங்கள் ஏமாற்றப்பட்டாலோ அவர்கள் கம்ப்யூட்டர் மலர் முகவரிக்குத் தெரிவிக்கலாம். அவர்களின் அடையாளம் தெரிவிக்கப்படாமல் பொதுமக்களின் நன்மை கருதி அவை வெளியிடப்படும்.
1. வங்கிகளிலிருந்து (ICICI, HDFC, Axis, PNB, Citi Bank ) வந்தது போல இமெயில்கள் அனுப்பப்படுகின்றன. இவற்றில் பெரும்பாலும், உங்களுடைய கணக்கில் சில தொகை விடுபட்டிருப்பது போல உள்ளது. எனவே கீழே உள்ள லிங்க்கில் கிளிக் செய்து தகவல்களைத் தரவும் என்று ஒரு லிங்க் தரப்பட்டிருக்கும். அக்கவுண்ட் இல்லாதவர்களுக்கும் கூட இந்த மெயில் அனுப்பப்படும். லிங்க்கில் கிளிக் செய்தால் அந்த வங்கியின் லோகோ மற்றும் அதன் இணையதள முகப்பு பாணியில் அமைந்த ஓர் இணையதளத்திற்கு எடுத்துச் செல்லப்படுவீர்கள். பின் பக்கம் பக்கமாகச் சிறுகச் சிறுக தகவல்கள் வாங்கப்படும். உங்கள் பெயர், ஊர், முகவரி, வங்கி அக்கவுண்ட் எண் , இன்டர்நெட் அக்கவுண்ட் யூசர் நேம், பாஸ்வேர்ட்,ஆகியவை பெறப்படும். இவற்றைப் பெற்றவுடன் உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து இன்டர்நெட் வழியாக நெட் பேங்கிங் வசதி மூலம் பணம் இன்னொரு அக்கவுண்ட்டிற்கு ட்ரான்ஸ்பர் செய்யப்படும். இது போல ட்ரான்ஸ்பர் செய்யப்படும் அக்கவுண்ட் உடனே அந்த வங்கியில் மூடப்படும். பெரும்பாலும் இவை பாதுகாப்பற்ற வங்கி அக்கவுண்ட் அல்லது வெளிநாட்டு வங்கி கிளை அக்கவுண்ட்டாக இருக்கும்.
2. மேலே சொன்னது போன்ற வங்கிகளில் இருந்து, கீழ்க்கண்ட தகவல்களை உறுதிப்படுத்த நீங்கள் பலமுறை கடிதம் அனுப்பியும் முன்வரவில்லை. இதுவே இறுதி கடிதம். இன்னும் 48 மணி நேரத்தில் சரியான தகவல்களைத் தந்து அப்டேட் செய்யா விட்டால் உங்கள் அக்கவுண்ட் சேவை நிறுத்தப்படும் என நம் கழுத்தின் மீது அமர்ந்து கொண்டு பேசுவது போன்ற தோரணையில் கடிதம் வரும். நாம் நம் அவசர வேலைகளில் இது உண்மை என நம்பி தகவல்களை அளித்துவிடுவோம். எந்த வங்கியும் இது போன்ற மெயில்களை அனுப்புவதில்லை. எனவே இது போல எந்த வங்கியின் பெயரில் மெயில் வந்தாலும் திறக்க வேண்டாம். ஆர்வத்தில் கூட இது என்னதான் பார்த்துவிடுவோமே என்று காரியத்தில் இறங்க வேண்டாம். பின் நம் பணத்திற்கு காரியம் செய்தவர்களாகிவிடுவோம்.
3. இதே போல Security Alert / Net Bank Alert என சப்ஜெக்ட் தலைப்பிட்டு, வங்கியின் சர்வர் கிராஷ் ஆகி தற்போது சரிப்படுத்தப்பட்டதாகவும், உங்கள் அக்கவுண்ட் தகவல்களைச் சரி பார்க்க கீழே உள்ள லிங்க் கிளிக் செய்திடுமாறு கடிதங்கள் வரும். இவையும் ஏமாற்றுபவையே.
4. வங்கி முகவரியிட்டு எச்சரிக்கைக் கடிதம் போல தந்து ஏமாற்றுபவர்களும் இருக்கிறார்கள். எங்கள் வங்கியிலிருந்து வந்தது போல மெயில்கள் வரும்; நம்ப வேண்டாம். உண்மையான லிங்க் இதுதான். நீங்கள் கிளிக் செய்து உங்கள் தகவல்களைப் பத்திரப்படுத்திக் கொள்ளுங்கள் என்று மெயில் வரும். கிளிக் செய்தால் மீண்டும் அதே கதை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு உங்கள் பெர்சனல் தகவல்களை இழப்பீர்கள்.

தினமும் 5 கி.மீ. நடந்தால் சர்க்கரை, இருதய நோயை விரட்டலாம் கருத்தரங்கில் அறிவுரை

கோவை: கோவை தினகரன் நாளிதழ் சார்பில் ஸ்ரீராமகிருஷ்ணா திருமண மண்டபத்தில் நடந்த மெடிஎக்ஸ்போ 2009 மருத்துவ கண்காட்சியில், காக்க காக்க இதயம் காக்க என்ற தலைப்பில் கே.ஜி. மருத்துவமனை இருதய நோய் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பரூக் பேசியதாவது:

இந்தியாவில் மாரடைப்பு நோய் விகிதாச்சாரம் அதிகரித்துக்கொண்டே போகிறது. முன்பு வயதானவர்களை தாக்கிய மாரடைப்பு நோய், இன்று வளம் வயதினரையும் தாக்குகிறது. நமது உணவு பழக்கவழக்க முறைகள்தான் இதற்கு காரணம்.

தாயின் வயிற்றில் குழந்தை உருவான ஆறாவது வாரத்தில் துடிக்க துவங்கும் தசைப்பகுதிதான் இருதயம். நமது உடலில் தொடர்ச்சியாக கடைசிவரை இயங்கிக்கொண்டே இருக்கும் ஒரே உறுப்பு இருதயம். இது, ஒருமுறை பழுதுபட்டால் மீண்டும் பழைய நிலைக்கு திரும்புவது கடினம்.

சர்க்கரை நோய், அதிக உடல் பருமன், கொழுப்பு சத்து, மது, புகை பிடித்தல், போதிய உடற்பயிற்சி இல்லாமல் இருத்தல், மனஅழுத்தம் ஆகியவை மாரடைப்பு உருவாக பிரதான காரணம். இப்பழக்கத்தை விட்டொழித்து இருதய நோய் இல்லாத சமுதாயத்தை உருவாக்குவோம். இவ்வாறு டாக்டர் பரூக் பேசினார்.

சர்க்கரை நோய் விழிப்புணர்வு பற்றி கோயம்புத்தூர் டயாபட்டீஸ் பவுண்டேசன் மருத்துவமனை தலைவர் டாக்டர் சேகர் பேசியதாவது:எவ்வித நோயும் இல்லாமல் இருப்பது ஆரோக்கியம் அல்ல. நம் கடமையை நாமே திருப்திகரமாக செய்ய முடிந்தால் மட்டுமே அது ஆரோக்கியம்.

உடல் ஆரோக்கியம் இல்லாதவர்கள் மனஅழுத்தத்திற்கு ஆளாகின்றனர். நம் உடலில் சர்க்கரை நோய் உருவாக நாம் சாப்பிடும் மாவு சத்துள்ள உணவு வகைகள்தான் காரணம். கார்போஹைட்ரேட் உணவுவகைகளை தவிர்த்து பழம், காய்கறி வகைகளை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். உணவு வகைகளை பிரிஜில் நாள் கணக்கில் வைத்து சாப்பிடக்கூடாது. அதிக கொழுப்பு சத்து உடல் ஆரோக்கியத்துக்கு ஆபத்தானது.

அரிசி சாதம் அளவை மூன்றில் ஒரு பங்காக குறைத்துக்கொள்ள வேண்டும். பருப்பு, கீரை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். நோய் இருந்தாலும், இல்லாவிட்டாலும் தினம் 5 கி.மீ. தூரம் நடக்க வேண்டும். இது, இருதயத்தை வலிமைப்படுத்தும். தினமும் ஐந்து கி.மீ. தூரம் நடந்தால் நம் வாழ்நாள் 15 வருடம் கூடும். சர்க்கரை, இருதய நோயை விரட்டிவிடலாம்.

எந்த மருத்துவரும், மருத்துவமனையும் செய்யாத சாதனையை வாக்கிங் செய்யும். வாக்கிங் செல்ல முடியாதவர்கள் வீட்டில் இருந்தபடியே முடிந்தவரை உடற்பயிற்சி செய்யலாம். உணவுமுறை மாற்றம், உடற்பயிற்சி இவை இரண்டும் இருந்தால் 70 சதவீத நோயை விரட்டிவிடலாம். ஆண்டுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்துகொள்வது நல்லது. இவ்வாறு டாக்டர் சேகர் பேசினார்.

கோவை பி.எஸ்.ஜி மருத்துவமனை டாக்டர் சதீஷ்குமார் உடல்பருமனுக்கான அறுவை சிகிச்சை முறைகள் குறித்து பேசியதாவது:

துரித உணவு பழக்கம், பரம்பரை கோளாறு, உடல்உழைப்பு குறைவு, உடற்பயிற்சி இன்மை காரணமாக இளவயதினருக்கும் உடல்பருமன் பிரச்னை காணப்படுகிறது. வயது, உயரம்த்திற்கு தகுந்த சராசரி எடை இருப்பது அவசியம். பித்தநீர் உணவுடன் சேர்ந்தால் கொழுப்பாக மாறி உடலில் சேர்கிறது. கை, கால் மற்றும் வெளிப்புற உடலில் உள்ள கொழுப்பைவிட வயிற்றில் உள்ள கொழுப்புதான் ஆபத்தானது.

அதிக கொழுப்பு உடலில் சேர்வதை தடுக்க சிறுகுடலில் 3 அடிக்கு மட்டும் பித்தநீர் சேருமாறு சிகிச்சை அளிக்கப்படுகிறது. தேவையான போது சிறுகுடலை பழைய நிலைக்கு கொண்டுவரமுடியும். ஆனால் வயிற்று பகுதியை வெட்டி எடுக்கும் சிகிச்சையில் பழைய நிலைக்கு கொண்டுவர இயலாது.

அதிக உணவு உட்கொள்ளாது தடுக்க இரைப்பையில் கிளிப் மாட்டும் முறை முன்பு இருந்தது. புண்ணாகிவிடும் ஆபத்து நிறைய உள்ளதால் அந்த சிகிச்சை நடைமுறையில் அரிதாகவே நடக்கிறது. கொழுப்பு பகுதி களை நீக்கும் சிகிச்சை எண்டாஸ்கோபி முறையிலேயே செய்வதால் தழும்புகள் ஏற்படாது. காய்கறி, கீரை, பழங்கள் உண்பது, வாய்கட்டுப்பாடு, உடற்பயிற்சி, தினமும் நடைபயிற்சி உடல்பருமன் நோயை தீர்க்கும்.

கே.எம்.சி.எச் மருத்துவமனை டாக்டர் குப்புராஜன் சிறுநீரக நலன் குறித்து பேசியதாவது: சிறுநீரகம் சீராக இயங்க போதிய தண்ணீர் அருந்துவதே சிறந்தவழி. சிறுநீரகம் தனது பணியை சிறப்பாக நிறைவேற்ற தண்ணீர்தான் முக்கிய காரணி. பழங்கள், கீரைகள், காய்கறிகள் என நார்ச்சத்து மிகுந்த உணவுகள் சிறுநீரகத்தின் பணிகளை சீராக்கும்.

உடலின் கழிவுகளை சுத்திகரிக்கும் முக்கிய பணியை செய்து உடல் இயக்கத்தை முழுமையாக்குவது சீறுநீரகம்தான். சிறிய அளவிலான சிறுநீரக கற்கள் வாழைத்தண்டை சாப்பிட்டால் குணமாகும். அதற்கும் வாழைத்தண்டு சாறுடன் போதுமான தண்ணீரும் சேர்ந்து அருந்துவதான் முழுமையான தீர்வாக அமையும். சிறுநீரக கோளாறுகளை எளிதில் கண்டறிந்து குணப்படுத்த நவீன சிகிச்சை முறைகள், சரியான மருந்து மாத்திரைகள் உதவும்.

கோவை கிருஷ்ணா ஹெல்த் கேர் சென்டர் மருத்துவர் பாலகுமாரன் எலும்பு அறுவை சிசிச்சை குறித்து பேசியதாவது: நவீன வசதிகள், வாழ்க்கை முறை காரணமாக உடல் எலும்புகளுக்கு முழுமையான வேலை கொடுப்பதற்கு தவறிவிடுகிறோம். சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடும் வழக்கம் குறைந்து வருகிறது. மேற்கத்திய கழிவறை உபயோகம் பெருகியதன் காரணமாக கால்மூட்டுகளுக்கு முழு வேலைகிடைப்பது இல்லை.

நிற்பது, அமர்வது, நடப்பது என எலும்புகளுக்கு முழுவேலை கொடுத்தாலே மூட்டுவலி வராது. மூட்டுக்கு முழுவேலை கொடுத்தால் வேதனை வராது. கை, கால், இடுப்பு எலும்புகளில் வலிஏற்படும் போது மூட்டு இணைப்புகளை இயல்பான நிலையில் இருக்கச்செய்தாலே பெரும்பாலான எலும்பு பிரச்னைகள் தீரும். வலியின் பிறப்பிடம் அறிந்து சிகிச்சை அளித்தால் மட்டுமே நோய் தீரும்.

கைகளில் வலி என்றால் முதுகெலும்பு இணைப்புகளை சோதிக்கவேண்டும். கால்களில் வலி என்றால் இடுப்பு எலும்பு இணைப்புகளை சோதிக்க வேண்டும். எல்லா எலும்பு பிரச்னைகளுக்கும் அறுவை சிசிச்சை தேவைப்படாது. முறையான பயிற்சி பெற்ற மருத்துவர்களை அணுகினால் நிரந்தர தீர்வு பெறமுடியும்.

கோவை தெலுங்குபாளையத்திலுள்ள பென்ஸ் வெக்கேசன் கிளப் நிர்வாக இயக்குனர் சரவணன், ‘உடலும் உள்ளமும்’ என்ற தலைப்பில் பேசுகையில்: ‘‘உடலும் உள்ளமும் பிரிக்க முடியா தவை, ஒன்றோடு ஒன்று இணைந்தவை. உடலும் உள்ளமும் நன்றாக இருக்க உடற்பயிற்சி மிக அவசியம். உடலை சுத்தமாக வைத்துக்கொண்டு உள்ளத்தை கவனிக்காவிட்டால் எந்த பயனும் இல்லை.

எனவே தினந்தோறும் உடலை பேணுவதோடு, உள்ளத்தில் நல்ல சிந் தனையை வளர்க்க வேண் டும். ஒவ்வொருவருக்கும் மனதில் தைரியம் இருக்க வேண்டும். நம்மால் முடியும் என்ற நம்பிக்கை வரவேண்டும். குடும்பம் நன்றாக இருந்தால் தான் உள்ளம் நன்றாக இருக்கும். உள்ளம் நன்றாக இருந்தால் தான் குடும்பத்தை சிறப்பாக நடத்த முடியும்.

உடல் ஆரோக்யமாக இருக்க காலையில் உடற்பயிற்சி செய்யலாம், நீச்சல் அடிக்கலாம், புத்தகம் படிக்கலாம். வாழ்க்கையில் வெற்றி பெற பொறுமை மிக அவசியம். மன பலம் இருந்தால் உடல் பலம் தானாக வரும்’’ என்றார்.

நன்றி-முத்துப்பேட்டை நண்பர்கள்

மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி: ஜூன் 1ல் துவக்கம்

சென்னை: 2011ம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணிகள் வரும் ஜூன் 1ம் தேதி தொடங்கவுள்ளது.

நாடு முழுவதும் 10 ஆண்டுகளுக்கு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.

கடைசியாக கடந்த 2001ம் ஆண்டு கணக்கெடுப்பு நடந்தது. இப்போது 2011ம் ஆண்டுக்கான கணக்கெடுப்பு வரும் ஜூன் 1ம் தேதி கணக்கெடுப்பு துவங்குகிறது.

இதற்கான ஆயத்த பணிகளில் தமிழக மக்கள் தொகை இயக்குனரகம் இறங்கியுள்ளது.

மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்காக மாநகராட்சி, நகராட்சி, தாலுகா வாரியாக கணக்கெடுப்பாளர்கள் பட்டியல தயாரிக்கப்பட்டு வருகிறது. மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பாக பிடிஓக்கள், தாசில்தார்கள், ஒரு நாள் பயிற்சி நெல்லையில் நடந்தது.

பயிற்சி முகாமில் மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குனரக புள்ளியியல் ஆய்வாளர் திருநாவுக்கரசு பேசுகையில், '2011 இந்திய சென்சஸுக்கான 15வது மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிகள் தமிழகத்தில் 2 கட்டங்களாக நடத்தப்படும்.

இப்பணிகளுக்காக தமிழகம் [^] முழுவதும் 1.5 லட்சம் பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். முதல் கட்டமாக வீடுகள், கட்டிடங்கள், குடும்பங்கள் ஆகியவற்றின் பட்டியல் தயாரிக்கப்படும்.

ஒவ்வொரு கணக்கெடுப்பாளர்களுக்கும் 120 வீடுகள் ஒதுக்கப்படும். இரண்டாம் கட்ட கணக்கெடுப்பு பணி அடுத்த ஆண்டு பிப் 9ம் தேதி தொடங்கி 28ம் தேதி நிறைவடையும்.

அப்போது குடும்பங்களில் உள்ள நபர்கள், கல்வித் தகுதி, பிறந்த இடம் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் சேகரிக்கப்படும். 2011 மார்ச் 1ம் தேதி முதல் 5ம் தேதி வரை மீண்டும் ஒரு முறை பட்டியல் சரி பார்க்கப்படும்' என்றார்.
நன்றி-Thats Tamil

விடுதலைப் போரில் முஸ்லிம்கள்.


1. காதிர் முஹைத்தீன் மரைக்காயர் (பர்மா, கிலாபாத், ஒத்துழையாமை
2. மி.. முஹம்மது அப்துல் காதர் சாஹிபு ி தென்காசி (கிலாபத், அந்நியத் துணி எரிப்பு, ஒத்துழையாமை இயக்கம்
3. அப்துல் ஹமீதுகான் 1932ல் சென்னை மேயராக பணியாற்றியவர் (சுதந்திரப் போராட்டத்திற்காக சென்னை சட்டசபையில் குரல் கொடுத்தார்.) 
4. முகமதலி சேலம் (கள்ளுக்கடை மறியல்)
5. பி.என். அப்துல் கபீர் தாராபுரம் (வில்லுப்பாட்டு மூலம் தேசப் பற்றை வளர்த்தார், கிலாபத்திலும் கலந்து கொண்டார்
6. பண்டிட் அப்துல் மஜீத் பளைக்குளம் (கிலாபத்
7. கலிபுல்லாஹ் திருச்சி (கிலாபத்)
8. நூர்மல் சென்னை (பகத்சிங் படத்தை அடையில் வைத்து
9. அப்துல் ஹமீது 
10. மௌலானா அப்துல் காதர்

1973ம் ஆண்டு தமிழக அரசு புத்தகம் ஒன்றை வெளியிட்டது.அப்பட்டியலில் 25% மேற்பட்ட முஸலி ம்கள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களின் விபரம் வருமாறு:
பள்ளப்பட்டி மனிமொழி மவ்லானா 
இராஜகிரி அப்துல்லா 
இளையான்குடி கரீம் கனி 
திருப்பத்தூர் அபூபக்கர் 
திருப்பத்தூர் தாஜிதீன்  
அத்தியூத்து அபூபக்கர் 
பக்கரி பாளையம் அனுமன் கான்  
சென்னை அமீர் ஹம்சா 
சென்னை ஹமீது  
செங்குன்றம் கனி  
வண்ணாரப்பேட்டை ஹயாத்கான்  
புதுவலசை இபுராஹிம் 
பார்த்திபனூர் இபுராஹிம்  
வனரங்குடி இபுராஹிம் 
இளையான்குடி அப்துல் கபூர்  
மேலூர் அப்துல் ஹமீது  
சோழசக்கர நல்லூர் அப்துல் ஜப்பார்  
தத்தனனூர் அப்துல் காதர்  
பட்டுக்கோட்டை அப்துல் காதர்  
திருப்பூர் அப்துர் ரஜாக்  
காவிரிப்பட்டினம் அப்துல் மஜித் 
குருவம் பள்ளி அப்துல் மஜீத்  
கண்ணாத்தாள் பட்டி அப்துல் முத்தலிபு  
லெப்பைக் குடிகாடு அப்துல் சலாம் 
ராம்நாடு அப்துல் வஹாப்  
மானாமதுரை அப்துல் பாசித் 
திரிவிடைச் சேரி அப்துல் வஹிப் 
அத்தியூத்து இபுராஹிம்  
சென்னை ஜாபர் ஹக்கிமி  
சிங்கம் மங்களம் ஜெய்னுல் ஆபிதீன் 
திருப்பத்தூர் காதர் பாட்ஷா
புதுவலசை முஹம்மது லால் கான்  
பார்த்திபனூர் கச்சி மைதீன் 
தஞ்சை முஹம்மது தாவூது 
அறந்தாங்கி முஹம்மதுசெரிபு  
திருச்சி வரகனேரி முஹம்மது சுல்தான்  
வடபழனி சென்னை முஹம்மது யூசுப்  
தூத்துக்குடி முஹம்மது கல்லுரிஜனி 
சிவகங்கை முஹம்மது இபுராஹிம்  
சென்னை முஹம்மது உமர்  
மதுரை மொய்தீன் பிச்சை  
அம்மன்சத்திரம் முஹம்மது மீராசா 
திருப்பத்தூர் பீர் முஹம்மது  
கும்பகோணம் ரஹ்மத்துல்லா  
குடியத்தம் நஜீமுல்லாஹ் 
கிருஷ்ணகிரி தாவூத் ஷாயிபு  
இராமநாதபுரம் சையது கனி 
பரகப்பேட்டை தாஜிதீன் 
மன்னர்குடி சிக்கந்தர் 
கம்பம் சிக்கந்தர் 
முதுகுளத்தூர் சுல்தான்  
கும்பகோணம் சுல்தான்  
இராமநாதபுரம் தாஜிதீன்
நன்றி : மாவீரன் திப்பு ப்லாக்ஸ்பாட்.காம்

எங்கள்வாழ்க்கை

நாம் யார் ? வளமையான வாழ்விற்காக இளமைகளை தொலைத்த துர்பாக்கியசாலிகள் ! வறுமை என்ற சுனாமியால் அரபிக்கடலோரம் கரை ஒதுங்கிய அடையாளம் தெரிந்த நடை பிணங்கள் ! சுதந்திரமாக சுற்றி திரிந்தபோது வறுமை எனும் சூறாவளியில் சிக்கிய திசை மாறிய பறவைகள் ! நிஜத்தை தொலைத்துவிட்டு நிழற்படத்திற்கு முத்தம் கொடுக்கும் அபாக்கிய சாலிகள் ! தொலைதூரத்தில் இருந்து கொண்டே தொலைபேசியிலே குடும்பம் நடத்தும் தொடர் கதைகள் ! கடிதத்தை பிரித்தவுடன் கண்ணீர் துளிகளால் கானல் நீராகிப் போகும் மனைவி எழுதிய எழுத்துக்கள்! ஈமெயிலிலும் இண்டர்நெட்டிலும் இல்லறம் நடத்தும் கம்ப்யூட்டர் வாதிகள் ! நலம் நலமறிய ஆவல் என்றால் பணம் பணமறிய ஆவல் என கேட்கும் . டி . எம் . மெஷின்கள் ! பகட்டான வாழ்க்கை வாழ பணத்திற்காக வாழக்கையை பறி கொடுத்த பரிதாபத்துக்குரியவர்கள் ! . சி . காற்றில் இருந்துக் கொண்டே மனைவியின் மூச்சுக்காற்றை முற்றும் துறந்தவர்கள் ! வளரும் பருவத்திலே வாரிசுகளை வாரியணைத்து கொஞ்சமுடியாத கல் நெஞ்சக்காரர்கள் ! தனிமையிலே உறங்கும் முன் தன்னையறியாமலே தாரை தாரையாக வழிந்தோடும் கண்ணீர் துளிகள் ! அபஷி என்ற அரபி வார்த்தைக்கு அனுபவத்தின் மூலம் அர்த்தமானவர்கள் ! உழைப்பு என்ற உள்ளார்ந்த அர்த்தத்தை உணர்வுபூர்வமாக உணர்ந்தவர்கள்! முடியும் வரை உழைத்து விட்டு முடிந்தவுடன் ஊர் செல்லும் நோயாளிகள் ! கொளுத்தும் வெயிலிலும் குத்தும் குளிரிலும் பறக்கும் தூசிகளுக்கும் இடையில் பழகிப்போன ஜந்துகள்! பெற்ற தாய்க்கும் வளர்த்த தந்தைக்கும் கட்டிய மனைவிக்கும் பெற்றெடுத்த குழந்தைக்கும் உற்ற குடும்பத்திற்கும் இடைவிடாது உழைக்கும் தியாகிகள் !