நஞ்சையும் புஞ்சையும் கொஞ்சி விளையாடும் தஞ்சைத் தரணியில் சமூக ஒற்றுமைக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழும் எங்கள் ஊர் 'திருப்பந்துருத்தி' இணைய உலகில் இப்போது அடியெடுத்து வைக்கிறது.

ஒற்றுமையுடனும் சகோதரத்துவத்துடனும் வாழும் முஸ்லிம்கள், இந்துக்கள், கிறித்தவர்கள் என எமதூர் மக்கள் அனைவருக்கும் சாதி மத பேதமின்றி சேவை செய்யும் நோக்கத்தில் இந்த வலைப்பதிவு உருவாக்கப்பட்டுள்ளது
திருப்பந்துருத்தி மண்ணில் பிறந்து திக்கெட்டும் பரந்து வாழும் எம் மண்ணின் மைந்தர்களை 'திருப்பந்துருத்தி' வலைப் பதிவு அன்புடன் வரவேற்கிறது.

தொடர்புக்கு-thiruppanthuruthi@gmail.com

2011ம் ஆண்டுக்கான மக்கள் தொகைக் கணக்கெடுப்பு தொடங்கியது

டெல்லி : 2011ம் ஆண்டுக்கான மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் பணிகள் இன்று தொடங்கின. முதல் நபராக குடியரசுத் தலைவர் [^] பிரதீபா பாட்டீலிடம் மக்கள் தொகைக் கணக்கு விவரம் எடுக்கப்பட்டது.

கிட்டத்தட்ட 100 கோடி மக்களைக் கொண்ட இந்தியாவில் மாபெரும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு இன்று தொடங்கியது. இந்த பிரமாண்டப் பணியில் 25 லட்சம் அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

நாடு முழுவதும் வீடு வீடாக சென்று மக்கள் தொகைக் கணக்கெடுப்பாளர்கள் இப்பணியை மேற்கொள்ளவுள்ளனர்.

ஒவ்வொரு பத்து ஆண்டுக்கு ஒரு முறை சென்சஸ் எடுக்கப்படுகிறது. இந்த ஆண்டு எடுக்கப்படும் கணக்கெடுப்பு பயோமெட்ரிக் முறையில் மேற்கொள்ளப்படுகிறது. 15 வயதுக்கு மேற்பட்டோர் குறித்த தகவல்களை சேகரிப்பதோடு அவர்களது கைரேகையும் பதிவு செய்ய்படும். புகைப்படமும் எடுக்கப்படும்.


மக்கள் தொகைக்க் கணக்கெடுப்பு இன்று காலை குடியரசுத் தலைவர் மாளிகையிலிருந்து தொடங்கியது. குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலை மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அதிகாரிகள் சந்தித்து விவரங்களை சேகரித்தனர்.

இந்த நிகழ்ச்சியில், உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், செயலாளர் ஜி.கே.பிள்ளை மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

பின்னர் துணைக் குடியரசுத் தலைவர் ஹமீத் அன்சாரியை சந்தித்து கணக்கெடுப்பு நடந்த்து.
இந்தியாவில் எடுக்கப்படும் 15வது மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் பணி இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் 1872ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சியின்போது சென்சஸ் கணக்கெடுப்பு தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

கருத்துரையிடுக