மூன்றாம் தலைமுறை தொழில்நுட்பம் எனப்படும் 3G தொலைதொடர்புசேவை தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களைச் சேர்ந்த BSNL வாடிக்கையாளர்களுக்கு நேற்று (31ம் தேதி) முதல் வழங்கப்பட்டன.
இதன்தொடக்க விழா நேற்று தஞ்சாவூரில் நடந்தது. துணை பொது மேலாளர் இருதயராஜ் வரவேற்றார். தஞ்சை தொலைதொடர்பு மாவட்ட பொது மேலாளர் ராஜாரெட்டி 3G சிம்கார்டின் முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். இந்திய மருத்துவக் கழக தஞ்சைகிளை தலைவர் சிங்காரவேலு பெற்றுக்கொண்டார்.
தஞ்சை தொலை தொடர்பு மாவட்டத்தில் ஏற்கனவே 2G சேவை இயங்கி வருகிறது. இந்நிலையில் வாடிக்கையாளர்கள் நலன் கருதி 3G சேவை நேற்று தொடங்கி வைக்கப்பட்டது.
2G சேவை பெற்றுள்ள வாடிக்கையாளர்கள் 3G சேவையை பெற 'M3G 120' என்று டைப் செய்து 53733 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்ப வேண்டும். பதில் கிடைத்தவுடன் மீண்டும்'M3G120 Y' என்று டைப் செய்து 53733 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பி உறுதி செய்து கொள்ளலாம்.
இதன் மூலம் ப்ரி-பெய்டு 3G பொது திட்டம் 120 என்ற சேவையை பெற்றுக் கொள்ள முடியும். புதிதாக 3G இணைப்பு பெற விரும்பும் வாடிக்கையாளர்கள் ரூ.59 மதிப்புள்ள 3G சிம்கார்டை பெற்று அதற்கான வசதியுள்ள செல்போனில் இந்த சிம் கார்டை பயன்படுத்தி ரூ120 மதிப்பில் ரீ-சார்ஜ் செய்ய வேண்டும். இதில் 180 நாட்களுக்கு ரூ.20 மதிப்பில் பேசும் வசதி உள்ளது.
போஸ்ட்பெய்ட் திட்டத்தில் இணைப்புபெற தற்போதுள்ள 2G பயனர்கள் ரூபாய் 99, 225, 325, 525, 1500 கூடுதலாக ரூபாய் 25 செலுத்தி 3G சேவையைப் பெறலாம்.
மொபைல் ப்ராட்பேண்ட் வசதியை ரூபாய் 4,034 மதிப்புள்ள USB டேட்டா கார்டு பயன்படுத்த வேண்டும். இதின்படி பகலில் 2GBயும் இரவில் 10GBயும் முதல் 60 நாட்களுக்கு பயன்படுத்த முடியும். இதன் வேகம் 3.6 MBPS ஆகும்.
ப்ரிபெய்டு பொது திட்டத்தில் வீடியோ அழைப்பிற்கு 70 பைசாவும், எஸ்.டி.டி அழைப்பிற்கு ரூபாய் 1 ஆகும். பல்வேறு மதிப்புகளில் டாப்-அப் வசதி மற்றும் ரீசார்ஜ் கூப்பன்கள் கிடைக்கிறது. இத்திட்டத்தின்கீழ் தொலைக்காட்சி வசதியும் கொடுக்கப்படுகிறது. 45 சேனல்களுக்கும் மாதம் ஒன்றுக்கு ரூபாய் 150 செலுத்த வேண்டும். தனி சேனலுக்கு ஒரு மாதத்திற்கு ரூபாய் 50, நாள் ஒன்றுக்கு ரூபாய் 10ம் செலுத்த வேண்டும்.
மேற்கொண்டு தகவல் அறிய 9486103207 என்ற செல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு பொதுமேலாளர் ராஜாரெட்டி கூறினார். துணை பொது மேலாளர்கள் ராமச்சந்திர ஐயர்,நாகராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். மக்கள் தொடர்பு அலுவலர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.
0 comments:
கருத்துரையிடுக