நஞ்சையும் புஞ்சையும் கொஞ்சி விளையாடும் தஞ்சைத் தரணியில் சமூக ஒற்றுமைக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழும் எங்கள் ஊர் 'திருப்பந்துருத்தி' இணைய உலகில் இப்போது அடியெடுத்து வைக்கிறது.

ஒற்றுமையுடனும் சகோதரத்துவத்துடனும் வாழும் முஸ்லிம்கள், இந்துக்கள், கிறித்தவர்கள் என எமதூர் மக்கள் அனைவருக்கும் சாதி மத பேதமின்றி சேவை செய்யும் நோக்கத்தில் இந்த வலைப்பதிவு உருவாக்கப்பட்டுள்ளது
திருப்பந்துருத்தி மண்ணில் பிறந்து திக்கெட்டும் பரந்து வாழும் எம் மண்ணின் மைந்தர்களை 'திருப்பந்துருத்தி' வலைப் பதிவு அன்புடன் வரவேற்கிறது.

தொடர்புக்கு-thiruppanthuruthi@gmail.com

மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி: ஜூன் 1ல் துவக்கம்

சென்னை: 2011ம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணிகள் வரும் ஜூன் 1ம் தேதி தொடங்கவுள்ளது.

நாடு முழுவதும் 10 ஆண்டுகளுக்கு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.

கடைசியாக கடந்த 2001ம் ஆண்டு கணக்கெடுப்பு நடந்தது. இப்போது 2011ம் ஆண்டுக்கான கணக்கெடுப்பு வரும் ஜூன் 1ம் தேதி கணக்கெடுப்பு துவங்குகிறது.

இதற்கான ஆயத்த பணிகளில் தமிழக மக்கள் தொகை இயக்குனரகம் இறங்கியுள்ளது.

மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்காக மாநகராட்சி, நகராட்சி, தாலுகா வாரியாக கணக்கெடுப்பாளர்கள் பட்டியல தயாரிக்கப்பட்டு வருகிறது. மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பாக பிடிஓக்கள், தாசில்தார்கள், ஒரு நாள் பயிற்சி நெல்லையில் நடந்தது.

பயிற்சி முகாமில் மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குனரக புள்ளியியல் ஆய்வாளர் திருநாவுக்கரசு பேசுகையில், '2011 இந்திய சென்சஸுக்கான 15வது மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிகள் தமிழகத்தில் 2 கட்டங்களாக நடத்தப்படும்.

இப்பணிகளுக்காக தமிழகம் [^] முழுவதும் 1.5 லட்சம் பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். முதல் கட்டமாக வீடுகள், கட்டிடங்கள், குடும்பங்கள் ஆகியவற்றின் பட்டியல் தயாரிக்கப்படும்.

ஒவ்வொரு கணக்கெடுப்பாளர்களுக்கும் 120 வீடுகள் ஒதுக்கப்படும். இரண்டாம் கட்ட கணக்கெடுப்பு பணி அடுத்த ஆண்டு பிப் 9ம் தேதி தொடங்கி 28ம் தேதி நிறைவடையும்.

அப்போது குடும்பங்களில் உள்ள நபர்கள், கல்வித் தகுதி, பிறந்த இடம் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் சேகரிக்கப்படும். 2011 மார்ச் 1ம் தேதி முதல் 5ம் தேதி வரை மீண்டும் ஒரு முறை பட்டியல் சரி பார்க்கப்படும்' என்றார்.
நன்றி-Thats Tamil

0 comments:

கருத்துரையிடுக