நஞ்சையும் புஞ்சையும் கொஞ்சி விளையாடும் தஞ்சைத் தரணியில் சமூக ஒற்றுமைக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழும் எங்கள் ஊர் 'திருப்பந்துருத்தி' இணைய உலகில் இப்போது அடியெடுத்து வைக்கிறது.

ஒற்றுமையுடனும் சகோதரத்துவத்துடனும் வாழும் முஸ்லிம்கள், இந்துக்கள், கிறித்தவர்கள் என எமதூர் மக்கள் அனைவருக்கும் சாதி மத பேதமின்றி சேவை செய்யும் நோக்கத்தில் இந்த வலைப்பதிவு உருவாக்கப்பட்டுள்ளது
திருப்பந்துருத்தி மண்ணில் பிறந்து திக்கெட்டும் பரந்து வாழும் எம் மண்ணின் மைந்தர்களை 'திருப்பந்துருத்தி' வலைப் பதிவு அன்புடன் வரவேற்கிறது.

தொடர்புக்கு-thiruppanthuruthi@gmail.com

பட்ஜெட் 2010-11: முக்கிய அம்சங்கள்

டெல்லி: நாடாளுமன்றத்தில் இன்று நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தாக்கல் செய்து வரும் பட்ஜெட் உரையின் முக்கிய அம்சங்கள்:

-ஆன்லைன் செய்தி நிறுவனங்களுக்கு சேவை வரி அதிகரிப்பு

-ரூ. 15 லட்சத்துக்கு மேல் வருமானம் ஈட்டும் நிறுவனங்களுக்கு கட்டாய ஆடிட்

-கூடுதலாக பல சேவைகளுக்கும் வரிகள் விதிக்கப்படும்

-விவசாய விதைகள் மீதான வரி முழுமையாக விலக்கு

(பட்ஜெட்டுக்கு இந்திய பங்குச் சந்தையில் வரவேற்பு, பங்கு விலைகள் உயர்வு)

-டிவி, ஃபிரிட்ஜ், ஏசி விலையும் உயருகிறது

-தங்கம் மற்றும் வெள்ளிக்கான இறக்குமதி வரி அதிகரிக்கப்படுகிறது.

-மோனோ ரயில்களுக்கு இறக்குமதி திட்ட அந்தஸ்து

-சிடி விலை குறையும்

-பெட்ரோலிய கச்சா எண்ணெய் மீது மீணடும் 5 சதவீத கலால் வரி

-இறக்குமதி செய்யப்படும் தங்கத்திற்கு 10 கிராமுக்கு ரூ. 300 சுங்க வரி விதிக்கப்படும். இதனால் தங்க நகை விலை உயரும்.

-அதிகபட்ச சுங்க வரி 10 சதவீதமாக இருக்கும்

-பெட்ரோல், டீசல் விலை உயரும்

-பெரிய கார்களுக்கு சுங்க வரி 22 சதவீதமாக உயர்வு

-(பெட்ரோலிய பொருட்கள் மீதான கூடுதல் வரியை கண்டித்து எதிர்க் கட்சிகள் வெளிநடப்பு)

--பெட்ரோலிய பொருட்கள் மீதான சுங்க வரி லிட்டருக்கு 1 ரூபாய் அதிகரிப்பு (இதனால் பெட்ரோல்-டீசல் விலை அதிகரிக்கும். இதை கண்டித்து எதி்ர்க் கட்சிகள் அமளி)

-கலால் வரி 8 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக அதிகரிப்பு

-கார்பரேட் நிறுவனங்கள் மீதான கூடுதல் வரி குறைப்பு

-சிகரெட் மீதான சுங்க வரி அதிகரிப்பு

-இந்த வருமான வரி சலுகையால் ரூ. 26,000 கோடி இழப்பு ஏற்படும்

-நீண்டகால அடிப்படைக் கட்டமைப்புத் திட்ட பத்திரங்களில் முதலீடு செய்தால் ரூ. 20,000 முதலீடு செய்தால் வரி சலுகை கிடைக்கும்

-இந்த புதிய வருமான வரி சலுகை மூலம் 60 சதவீத வருமான வரி செலுத்துவோர் பயன் பெறுவர்.

-ஆண்டுக்கு ரூ. 1.6 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு முழு வருமான வரி விலக்கு தொடரும்

-ரூ. 1.6 லட்சம் முதல் ரூ. 5 லட்சம் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு வரி 10 சதவீதமாக இருக்கும். (இதுவரை ரூ. 3 லட்சத்துக்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு 20 சதவீத வருமான வரி இருந்தது.)

-ரூ. 5 லட்சத்தி்ல் இருந்து 8 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு வருமான வரி 20 சதவீதம்

-ரூ. 8 லட்சத்துக்கு மேல் வருட வருமானம் உள்ளவர்களுக்கு வரி 30 சதவீதமாக தொடரும்

-பாதுகாப்புத்துறைக்கான நிதி ஒதுக்கீடு ரூ. 6,000 கோடி அதிகரிப்பு

-உணவுப் பற்றாக்குறையை தனியார் துறை உதவியோடு வெல்வோம்

-பாதுகாப்புத் துறைக்கு ரூ. 1.47 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு

-ஒருங்கிணைந்த தேசிய அடையாள அட்டை திட்டத்துக்கு ரூ. 1900 கோடி

-இந்த ஆண்டு நிதிப் பற்றாக்குறை 5.5 சதவீதமாக உள்ளது

-திட்ட செலவுகள் 15 சதவீதம் அதிகரித்துள்ளது

-மொத்த வரி வருமானம் ரூ. 7.46 லட்சம் கோடியாக இருக்கும்

-பெண் விவசாயிகள் நலத் திட்டத்துக்கு ரூ. 100 கோடி
---------------------------------
நன்றி-ThatsTamil
 

ஹார்ட் அட்டாக்கும் முதல் உதவிகளும்.


ஹார்ட் அட்டாக்கும் முதல் உதவிகளும்.

டாக்டர் A. ஷேக் அலாவுதீன்
MD., (Chin.Med), A.T.C.M (CHINA)
Zhejiang University, Hangzhou, (China)
(Chinese Traditional Medicine).
ஹார்ட் அட்டாக் இந்த வார்த்தையே பயத்தை உண்டாக்கும், இதனால் ஏற்படும் பதட்டமோ பிரச்சனையை அதிகமாக்கும். நிதானமாக இக்கட்டுரையில் இருப்பது போல் செயல்பட்டால் ஹார்ட் அட்டாக்கிலிருந்து மிகவும் எளிதாக விடுபடலாம். (இன்ஷா அல்லாஹ்).
இதயம் இதன் அழகிய துடிப்புகளின் ஏற்ற இறக்கமே நோய்களின் விளக்கம். துடிப்புகளின் மவுனம் அதுதான் மரணம். இறைவன் நம்உடல் இயக்கத்திற்காக அளித்த ஓர் அற்புத தொழிற்சாலை. இதயம் அது தானாக இயங்குவதில்லை உடல் உறுப்புகள் பாதிப்பு அடையும் போது அவை தன் நிலையை மூளைக்கு தெரிவிக்க மூளை இதயத்திற்கு உத்திரவிடுகின்றது. இதயம் இரத்த ஓட்டம் மூலம் பாதிக்கப்பட்ட உறுப்புக்கு சக்திஅளித்து அதன் சக்தியை சமநிலைப்படுத்தி உறுப்பை சீராக இயங்க வைக்கின்றது. பாதிப்படைந்த உறுப்பு அனுப்பும் தகவல் இதயத்திற்கு கிடைக்காமல் போனாலோ, இதயத்திற்கு தகவல் கிடைத்து இரத்தத்தை (சக்தியை) அனுப்பும்போது தடங்கல் ஏற்பட்டாலோ (இரத்த குழாய் அடைப்பு போன்ற காரணங்களால்) பல உறுப்புகள் பாதிப்படைந்த நிலையில் குறிப்பிட்ட ஒரு உறுப்புக்க போதுமான இரத்தத்தை அனுப்ப முடியாமல் போனாலே ஹார்ட் அட்டாக் ஏற்படுகிறது.
ஆனால் நவீன மருத்துவத்தில் இதயம் தானாகவே இயங்குவதாக நினைத்து அதன் வேகத்தைக் குறைக்க மருந்து, மாத்திரைகள் கொடுத்து நன்றாக இருக்கும் இதயத்தை அநியாயமாக கெடுத்துவிடுகின்றனர்.

நுரையீரல், பெருங்குடல், வயிறு, மண்ணீரல், இதயம், சிறுகுடல், சிறுநீரகம் (கிட்னி), சிறுநீர் பை, பித்தப்பை மற்றும் கல்லீரல் போன்றவைகள் மிக மிக முக்கியமான உடல் உறுப்புகள். மற்றவை அனைத்தும் இந்த உறுப்புகளை சார்ந்தவையே. இந்த உறுப்புகள் எவ்வாறு இதயத்தோடு சம்பந்தப்படுகிறது என்பதையும் எந்தெந்த உறுப்பு பாதிப்படைந்தால் எந்தெந்த நேரத்தில் ஹார்ட் அட்டாக் வரும், எந்த சூழ்நிலைகள் மற்றும் சந்தற்பங்களில் வரும் இதற்கான முதல் உதவி முறைகள் என்ன? எப்படி செய்வது என்பதை இன்ஷா அல்லாஹ் இத்தொடரில் நாம் தெரிந்துகொள்வோம்.

பணம் பறிக்க தூண்டில் போடும் இமெயில்கள்

இமெயில்கள் வழியாகப் பணம் பறிக்க மொத்தமாக அனுப்பப்படும் மெயில்கள் குறித்துப் பல முறை தகவல்களைத் தந்துள்ளோம். சென்ற வாரம் தகவல் தொடர்பு குற்றங்களைக் கண்காணிக்கும் சென்னை சைபர் கிரைம் செல் அலுவலகத்திலிருந்து வந்த ஒரு கடிதம், இன்னும் இது போல பலர் ஏமாற்றமடைவதை உறுதிப் படுத்தியுள்ளது. ஏமாறும் பலரில், விரல் விட்டு எண்ணக் கூடிய சிலரே காவல் நிலையத்தில் புகார் அளிக்கின்றனர். தாங்கள் ஏமாந்தது தெரிந்தால் தங்களுக்கு அவமானம் என்று கருதி பலர் வெளியே சொல்லாமலே இருந்துவிடுகின்றனர். பணம் பறிக்கத் தூண்டில் போடும் இமெயில்கள் இங்கு வகைப்படுத்தி பட்டியலிடப்பட்டுள்ளன. இன்டர்நெட் மற்றும் இமெயில்களைப் பயன்படுத்துவோர் கவனமாக இவற்றைத் தவிர்க்குமாறு காவல்துறையும் கேட்டுக் கொண்டுள்ளது. இன்னும் புதுவிதமான வழிகளில் யாருக்கேனும் மெயில்கள் வந்தாலோ அல்லது தாங்கள் ஏமாற்றப்பட்டாலோ அவர்கள் கம்ப்யூட்டர் மலர் முகவரிக்குத் தெரிவிக்கலாம். அவர்களின் அடையாளம் தெரிவிக்கப்படாமல் பொதுமக்களின் நன்மை கருதி அவை வெளியிடப்படும்.
1. வங்கிகளிலிருந்து (ICICI, HDFC, Axis, PNB, Citi Bank ) வந்தது போல இமெயில்கள் அனுப்பப்படுகின்றன. இவற்றில் பெரும்பாலும், உங்களுடைய கணக்கில் சில தொகை விடுபட்டிருப்பது போல உள்ளது. எனவே கீழே உள்ள லிங்க்கில் கிளிக் செய்து தகவல்களைத் தரவும் என்று ஒரு லிங்க் தரப்பட்டிருக்கும். அக்கவுண்ட் இல்லாதவர்களுக்கும் கூட இந்த மெயில் அனுப்பப்படும். லிங்க்கில் கிளிக் செய்தால் அந்த வங்கியின் லோகோ மற்றும் அதன் இணையதள முகப்பு பாணியில் அமைந்த ஓர் இணையதளத்திற்கு எடுத்துச் செல்லப்படுவீர்கள். பின் பக்கம் பக்கமாகச் சிறுகச் சிறுக தகவல்கள் வாங்கப்படும். உங்கள் பெயர், ஊர், முகவரி, வங்கி அக்கவுண்ட் எண் , இன்டர்நெட் அக்கவுண்ட் யூசர் நேம், பாஸ்வேர்ட்,ஆகியவை பெறப்படும். இவற்றைப் பெற்றவுடன் உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து இன்டர்நெட் வழியாக நெட் பேங்கிங் வசதி மூலம் பணம் இன்னொரு அக்கவுண்ட்டிற்கு ட்ரான்ஸ்பர் செய்யப்படும். இது போல ட்ரான்ஸ்பர் செய்யப்படும் அக்கவுண்ட் உடனே அந்த வங்கியில் மூடப்படும். பெரும்பாலும் இவை பாதுகாப்பற்ற வங்கி அக்கவுண்ட் அல்லது வெளிநாட்டு வங்கி கிளை அக்கவுண்ட்டாக இருக்கும்.
2. மேலே சொன்னது போன்ற வங்கிகளில் இருந்து, கீழ்க்கண்ட தகவல்களை உறுதிப்படுத்த நீங்கள் பலமுறை கடிதம் அனுப்பியும் முன்வரவில்லை. இதுவே இறுதி கடிதம். இன்னும் 48 மணி நேரத்தில் சரியான தகவல்களைத் தந்து அப்டேட் செய்யா விட்டால் உங்கள் அக்கவுண்ட் சேவை நிறுத்தப்படும் என நம் கழுத்தின் மீது அமர்ந்து கொண்டு பேசுவது போன்ற தோரணையில் கடிதம் வரும். நாம் நம் அவசர வேலைகளில் இது உண்மை என நம்பி தகவல்களை அளித்துவிடுவோம். எந்த வங்கியும் இது போன்ற மெயில்களை அனுப்புவதில்லை. எனவே இது போல எந்த வங்கியின் பெயரில் மெயில் வந்தாலும் திறக்க வேண்டாம். ஆர்வத்தில் கூட இது என்னதான் பார்த்துவிடுவோமே என்று காரியத்தில் இறங்க வேண்டாம். பின் நம் பணத்திற்கு காரியம் செய்தவர்களாகிவிடுவோம்.
3. இதே போல Security Alert / Net Bank Alert என சப்ஜெக்ட் தலைப்பிட்டு, வங்கியின் சர்வர் கிராஷ் ஆகி தற்போது சரிப்படுத்தப்பட்டதாகவும், உங்கள் அக்கவுண்ட் தகவல்களைச் சரி பார்க்க கீழே உள்ள லிங்க் கிளிக் செய்திடுமாறு கடிதங்கள் வரும். இவையும் ஏமாற்றுபவையே.
4. வங்கி முகவரியிட்டு எச்சரிக்கைக் கடிதம் போல தந்து ஏமாற்றுபவர்களும் இருக்கிறார்கள். எங்கள் வங்கியிலிருந்து வந்தது போல மெயில்கள் வரும்; நம்ப வேண்டாம். உண்மையான லிங்க் இதுதான். நீங்கள் கிளிக் செய்து உங்கள் தகவல்களைப் பத்திரப்படுத்திக் கொள்ளுங்கள் என்று மெயில் வரும். கிளிக் செய்தால் மீண்டும் அதே கதை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு உங்கள் பெர்சனல் தகவல்களை இழப்பீர்கள்.

தினமும் 5 கி.மீ. நடந்தால் சர்க்கரை, இருதய நோயை விரட்டலாம் கருத்தரங்கில் அறிவுரை

கோவை: கோவை தினகரன் நாளிதழ் சார்பில் ஸ்ரீராமகிருஷ்ணா திருமண மண்டபத்தில் நடந்த மெடிஎக்ஸ்போ 2009 மருத்துவ கண்காட்சியில், காக்க காக்க இதயம் காக்க என்ற தலைப்பில் கே.ஜி. மருத்துவமனை இருதய நோய் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பரூக் பேசியதாவது:

இந்தியாவில் மாரடைப்பு நோய் விகிதாச்சாரம் அதிகரித்துக்கொண்டே போகிறது. முன்பு வயதானவர்களை தாக்கிய மாரடைப்பு நோய், இன்று வளம் வயதினரையும் தாக்குகிறது. நமது உணவு பழக்கவழக்க முறைகள்தான் இதற்கு காரணம்.

தாயின் வயிற்றில் குழந்தை உருவான ஆறாவது வாரத்தில் துடிக்க துவங்கும் தசைப்பகுதிதான் இருதயம். நமது உடலில் தொடர்ச்சியாக கடைசிவரை இயங்கிக்கொண்டே இருக்கும் ஒரே உறுப்பு இருதயம். இது, ஒருமுறை பழுதுபட்டால் மீண்டும் பழைய நிலைக்கு திரும்புவது கடினம்.

சர்க்கரை நோய், அதிக உடல் பருமன், கொழுப்பு சத்து, மது, புகை பிடித்தல், போதிய உடற்பயிற்சி இல்லாமல் இருத்தல், மனஅழுத்தம் ஆகியவை மாரடைப்பு உருவாக பிரதான காரணம். இப்பழக்கத்தை விட்டொழித்து இருதய நோய் இல்லாத சமுதாயத்தை உருவாக்குவோம். இவ்வாறு டாக்டர் பரூக் பேசினார்.

சர்க்கரை நோய் விழிப்புணர்வு பற்றி கோயம்புத்தூர் டயாபட்டீஸ் பவுண்டேசன் மருத்துவமனை தலைவர் டாக்டர் சேகர் பேசியதாவது:எவ்வித நோயும் இல்லாமல் இருப்பது ஆரோக்கியம் அல்ல. நம் கடமையை நாமே திருப்திகரமாக செய்ய முடிந்தால் மட்டுமே அது ஆரோக்கியம்.

உடல் ஆரோக்கியம் இல்லாதவர்கள் மனஅழுத்தத்திற்கு ஆளாகின்றனர். நம் உடலில் சர்க்கரை நோய் உருவாக நாம் சாப்பிடும் மாவு சத்துள்ள உணவு வகைகள்தான் காரணம். கார்போஹைட்ரேட் உணவுவகைகளை தவிர்த்து பழம், காய்கறி வகைகளை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். உணவு வகைகளை பிரிஜில் நாள் கணக்கில் வைத்து சாப்பிடக்கூடாது. அதிக கொழுப்பு சத்து உடல் ஆரோக்கியத்துக்கு ஆபத்தானது.

அரிசி சாதம் அளவை மூன்றில் ஒரு பங்காக குறைத்துக்கொள்ள வேண்டும். பருப்பு, கீரை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். நோய் இருந்தாலும், இல்லாவிட்டாலும் தினம் 5 கி.மீ. தூரம் நடக்க வேண்டும். இது, இருதயத்தை வலிமைப்படுத்தும். தினமும் ஐந்து கி.மீ. தூரம் நடந்தால் நம் வாழ்நாள் 15 வருடம் கூடும். சர்க்கரை, இருதய நோயை விரட்டிவிடலாம்.

எந்த மருத்துவரும், மருத்துவமனையும் செய்யாத சாதனையை வாக்கிங் செய்யும். வாக்கிங் செல்ல முடியாதவர்கள் வீட்டில் இருந்தபடியே முடிந்தவரை உடற்பயிற்சி செய்யலாம். உணவுமுறை மாற்றம், உடற்பயிற்சி இவை இரண்டும் இருந்தால் 70 சதவீத நோயை விரட்டிவிடலாம். ஆண்டுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்துகொள்வது நல்லது. இவ்வாறு டாக்டர் சேகர் பேசினார்.

கோவை பி.எஸ்.ஜி மருத்துவமனை டாக்டர் சதீஷ்குமார் உடல்பருமனுக்கான அறுவை சிகிச்சை முறைகள் குறித்து பேசியதாவது:

துரித உணவு பழக்கம், பரம்பரை கோளாறு, உடல்உழைப்பு குறைவு, உடற்பயிற்சி இன்மை காரணமாக இளவயதினருக்கும் உடல்பருமன் பிரச்னை காணப்படுகிறது. வயது, உயரம்த்திற்கு தகுந்த சராசரி எடை இருப்பது அவசியம். பித்தநீர் உணவுடன் சேர்ந்தால் கொழுப்பாக மாறி உடலில் சேர்கிறது. கை, கால் மற்றும் வெளிப்புற உடலில் உள்ள கொழுப்பைவிட வயிற்றில் உள்ள கொழுப்புதான் ஆபத்தானது.

அதிக கொழுப்பு உடலில் சேர்வதை தடுக்க சிறுகுடலில் 3 அடிக்கு மட்டும் பித்தநீர் சேருமாறு சிகிச்சை அளிக்கப்படுகிறது. தேவையான போது சிறுகுடலை பழைய நிலைக்கு கொண்டுவரமுடியும். ஆனால் வயிற்று பகுதியை வெட்டி எடுக்கும் சிகிச்சையில் பழைய நிலைக்கு கொண்டுவர இயலாது.

அதிக உணவு உட்கொள்ளாது தடுக்க இரைப்பையில் கிளிப் மாட்டும் முறை முன்பு இருந்தது. புண்ணாகிவிடும் ஆபத்து நிறைய உள்ளதால் அந்த சிகிச்சை நடைமுறையில் அரிதாகவே நடக்கிறது. கொழுப்பு பகுதி களை நீக்கும் சிகிச்சை எண்டாஸ்கோபி முறையிலேயே செய்வதால் தழும்புகள் ஏற்படாது. காய்கறி, கீரை, பழங்கள் உண்பது, வாய்கட்டுப்பாடு, உடற்பயிற்சி, தினமும் நடைபயிற்சி உடல்பருமன் நோயை தீர்க்கும்.

கே.எம்.சி.எச் மருத்துவமனை டாக்டர் குப்புராஜன் சிறுநீரக நலன் குறித்து பேசியதாவது: சிறுநீரகம் சீராக இயங்க போதிய தண்ணீர் அருந்துவதே சிறந்தவழி. சிறுநீரகம் தனது பணியை சிறப்பாக நிறைவேற்ற தண்ணீர்தான் முக்கிய காரணி. பழங்கள், கீரைகள், காய்கறிகள் என நார்ச்சத்து மிகுந்த உணவுகள் சிறுநீரகத்தின் பணிகளை சீராக்கும்.

உடலின் கழிவுகளை சுத்திகரிக்கும் முக்கிய பணியை செய்து உடல் இயக்கத்தை முழுமையாக்குவது சீறுநீரகம்தான். சிறிய அளவிலான சிறுநீரக கற்கள் வாழைத்தண்டை சாப்பிட்டால் குணமாகும். அதற்கும் வாழைத்தண்டு சாறுடன் போதுமான தண்ணீரும் சேர்ந்து அருந்துவதான் முழுமையான தீர்வாக அமையும். சிறுநீரக கோளாறுகளை எளிதில் கண்டறிந்து குணப்படுத்த நவீன சிகிச்சை முறைகள், சரியான மருந்து மாத்திரைகள் உதவும்.

கோவை கிருஷ்ணா ஹெல்த் கேர் சென்டர் மருத்துவர் பாலகுமாரன் எலும்பு அறுவை சிசிச்சை குறித்து பேசியதாவது: நவீன வசதிகள், வாழ்க்கை முறை காரணமாக உடல் எலும்புகளுக்கு முழுமையான வேலை கொடுப்பதற்கு தவறிவிடுகிறோம். சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடும் வழக்கம் குறைந்து வருகிறது. மேற்கத்திய கழிவறை உபயோகம் பெருகியதன் காரணமாக கால்மூட்டுகளுக்கு முழு வேலைகிடைப்பது இல்லை.

நிற்பது, அமர்வது, நடப்பது என எலும்புகளுக்கு முழுவேலை கொடுத்தாலே மூட்டுவலி வராது. மூட்டுக்கு முழுவேலை கொடுத்தால் வேதனை வராது. கை, கால், இடுப்பு எலும்புகளில் வலிஏற்படும் போது மூட்டு இணைப்புகளை இயல்பான நிலையில் இருக்கச்செய்தாலே பெரும்பாலான எலும்பு பிரச்னைகள் தீரும். வலியின் பிறப்பிடம் அறிந்து சிகிச்சை அளித்தால் மட்டுமே நோய் தீரும்.

கைகளில் வலி என்றால் முதுகெலும்பு இணைப்புகளை சோதிக்கவேண்டும். கால்களில் வலி என்றால் இடுப்பு எலும்பு இணைப்புகளை சோதிக்க வேண்டும். எல்லா எலும்பு பிரச்னைகளுக்கும் அறுவை சிசிச்சை தேவைப்படாது. முறையான பயிற்சி பெற்ற மருத்துவர்களை அணுகினால் நிரந்தர தீர்வு பெறமுடியும்.

கோவை தெலுங்குபாளையத்திலுள்ள பென்ஸ் வெக்கேசன் கிளப் நிர்வாக இயக்குனர் சரவணன், ‘உடலும் உள்ளமும்’ என்ற தலைப்பில் பேசுகையில்: ‘‘உடலும் உள்ளமும் பிரிக்க முடியா தவை, ஒன்றோடு ஒன்று இணைந்தவை. உடலும் உள்ளமும் நன்றாக இருக்க உடற்பயிற்சி மிக அவசியம். உடலை சுத்தமாக வைத்துக்கொண்டு உள்ளத்தை கவனிக்காவிட்டால் எந்த பயனும் இல்லை.

எனவே தினந்தோறும் உடலை பேணுவதோடு, உள்ளத்தில் நல்ல சிந் தனையை வளர்க்க வேண் டும். ஒவ்வொருவருக்கும் மனதில் தைரியம் இருக்க வேண்டும். நம்மால் முடியும் என்ற நம்பிக்கை வரவேண்டும். குடும்பம் நன்றாக இருந்தால் தான் உள்ளம் நன்றாக இருக்கும். உள்ளம் நன்றாக இருந்தால் தான் குடும்பத்தை சிறப்பாக நடத்த முடியும்.

உடல் ஆரோக்யமாக இருக்க காலையில் உடற்பயிற்சி செய்யலாம், நீச்சல் அடிக்கலாம், புத்தகம் படிக்கலாம். வாழ்க்கையில் வெற்றி பெற பொறுமை மிக அவசியம். மன பலம் இருந்தால் உடல் பலம் தானாக வரும்’’ என்றார்.

நன்றி-முத்துப்பேட்டை நண்பர்கள்

மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி: ஜூன் 1ல் துவக்கம்

சென்னை: 2011ம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணிகள் வரும் ஜூன் 1ம் தேதி தொடங்கவுள்ளது.

நாடு முழுவதும் 10 ஆண்டுகளுக்கு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.

கடைசியாக கடந்த 2001ம் ஆண்டு கணக்கெடுப்பு நடந்தது. இப்போது 2011ம் ஆண்டுக்கான கணக்கெடுப்பு வரும் ஜூன் 1ம் தேதி கணக்கெடுப்பு துவங்குகிறது.

இதற்கான ஆயத்த பணிகளில் தமிழக மக்கள் தொகை இயக்குனரகம் இறங்கியுள்ளது.

மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்காக மாநகராட்சி, நகராட்சி, தாலுகா வாரியாக கணக்கெடுப்பாளர்கள் பட்டியல தயாரிக்கப்பட்டு வருகிறது. மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பாக பிடிஓக்கள், தாசில்தார்கள், ஒரு நாள் பயிற்சி நெல்லையில் நடந்தது.

பயிற்சி முகாமில் மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குனரக புள்ளியியல் ஆய்வாளர் திருநாவுக்கரசு பேசுகையில், '2011 இந்திய சென்சஸுக்கான 15வது மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிகள் தமிழகத்தில் 2 கட்டங்களாக நடத்தப்படும்.

இப்பணிகளுக்காக தமிழகம் [^] முழுவதும் 1.5 லட்சம் பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். முதல் கட்டமாக வீடுகள், கட்டிடங்கள், குடும்பங்கள் ஆகியவற்றின் பட்டியல் தயாரிக்கப்படும்.

ஒவ்வொரு கணக்கெடுப்பாளர்களுக்கும் 120 வீடுகள் ஒதுக்கப்படும். இரண்டாம் கட்ட கணக்கெடுப்பு பணி அடுத்த ஆண்டு பிப் 9ம் தேதி தொடங்கி 28ம் தேதி நிறைவடையும்.

அப்போது குடும்பங்களில் உள்ள நபர்கள், கல்வித் தகுதி, பிறந்த இடம் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் சேகரிக்கப்படும். 2011 மார்ச் 1ம் தேதி முதல் 5ம் தேதி வரை மீண்டும் ஒரு முறை பட்டியல் சரி பார்க்கப்படும்' என்றார்.
நன்றி-Thats Tamil

விடுதலைப் போரில் முஸ்லிம்கள்.


1. காதிர் முஹைத்தீன் மரைக்காயர் (பர்மா, கிலாபாத், ஒத்துழையாமை
2. மி.. முஹம்மது அப்துல் காதர் சாஹிபு ி தென்காசி (கிலாபத், அந்நியத் துணி எரிப்பு, ஒத்துழையாமை இயக்கம்
3. அப்துல் ஹமீதுகான் 1932ல் சென்னை மேயராக பணியாற்றியவர் (சுதந்திரப் போராட்டத்திற்காக சென்னை சட்டசபையில் குரல் கொடுத்தார்.) 
4. முகமதலி சேலம் (கள்ளுக்கடை மறியல்)
5. பி.என். அப்துல் கபீர் தாராபுரம் (வில்லுப்பாட்டு மூலம் தேசப் பற்றை வளர்த்தார், கிலாபத்திலும் கலந்து கொண்டார்
6. பண்டிட் அப்துல் மஜீத் பளைக்குளம் (கிலாபத்
7. கலிபுல்லாஹ் திருச்சி (கிலாபத்)
8. நூர்மல் சென்னை (பகத்சிங் படத்தை அடையில் வைத்து
9. அப்துல் ஹமீது 
10. மௌலானா அப்துல் காதர்

1973ம் ஆண்டு தமிழக அரசு புத்தகம் ஒன்றை வெளியிட்டது.அப்பட்டியலில் 25% மேற்பட்ட முஸலி ம்கள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களின் விபரம் வருமாறு:
பள்ளப்பட்டி மனிமொழி மவ்லானா 
இராஜகிரி அப்துல்லா 
இளையான்குடி கரீம் கனி 
திருப்பத்தூர் அபூபக்கர் 
திருப்பத்தூர் தாஜிதீன்  
அத்தியூத்து அபூபக்கர் 
பக்கரி பாளையம் அனுமன் கான்  
சென்னை அமீர் ஹம்சா 
சென்னை ஹமீது  
செங்குன்றம் கனி  
வண்ணாரப்பேட்டை ஹயாத்கான்  
புதுவலசை இபுராஹிம் 
பார்த்திபனூர் இபுராஹிம்  
வனரங்குடி இபுராஹிம் 
இளையான்குடி அப்துல் கபூர்  
மேலூர் அப்துல் ஹமீது  
சோழசக்கர நல்லூர் அப்துல் ஜப்பார்  
தத்தனனூர் அப்துல் காதர்  
பட்டுக்கோட்டை அப்துல் காதர்  
திருப்பூர் அப்துர் ரஜாக்  
காவிரிப்பட்டினம் அப்துல் மஜித் 
குருவம் பள்ளி அப்துல் மஜீத்  
கண்ணாத்தாள் பட்டி அப்துல் முத்தலிபு  
லெப்பைக் குடிகாடு அப்துல் சலாம் 
ராம்நாடு அப்துல் வஹாப்  
மானாமதுரை அப்துல் பாசித் 
திரிவிடைச் சேரி அப்துல் வஹிப் 
அத்தியூத்து இபுராஹிம்  
சென்னை ஜாபர் ஹக்கிமி  
சிங்கம் மங்களம் ஜெய்னுல் ஆபிதீன் 
திருப்பத்தூர் காதர் பாட்ஷா
புதுவலசை முஹம்மது லால் கான்  
பார்த்திபனூர் கச்சி மைதீன் 
தஞ்சை முஹம்மது தாவூது 
அறந்தாங்கி முஹம்மதுசெரிபு  
திருச்சி வரகனேரி முஹம்மது சுல்தான்  
வடபழனி சென்னை முஹம்மது யூசுப்  
தூத்துக்குடி முஹம்மது கல்லுரிஜனி 
சிவகங்கை முஹம்மது இபுராஹிம்  
சென்னை முஹம்மது உமர்  
மதுரை மொய்தீன் பிச்சை  
அம்மன்சத்திரம் முஹம்மது மீராசா 
திருப்பத்தூர் பீர் முஹம்மது  
கும்பகோணம் ரஹ்மத்துல்லா  
குடியத்தம் நஜீமுல்லாஹ் 
கிருஷ்ணகிரி தாவூத் ஷாயிபு  
இராமநாதபுரம் சையது கனி 
பரகப்பேட்டை தாஜிதீன் 
மன்னர்குடி சிக்கந்தர் 
கம்பம் சிக்கந்தர் 
முதுகுளத்தூர் சுல்தான்  
கும்பகோணம் சுல்தான்  
இராமநாதபுரம் தாஜிதீன்
நன்றி : மாவீரன் திப்பு ப்லாக்ஸ்பாட்.காம்

எங்கள்வாழ்க்கை

நாம் யார் ? வளமையான வாழ்விற்காக இளமைகளை தொலைத்த துர்பாக்கியசாலிகள் ! வறுமை என்ற சுனாமியால் அரபிக்கடலோரம் கரை ஒதுங்கிய அடையாளம் தெரிந்த நடை பிணங்கள் ! சுதந்திரமாக சுற்றி திரிந்தபோது வறுமை எனும் சூறாவளியில் சிக்கிய திசை மாறிய பறவைகள் ! நிஜத்தை தொலைத்துவிட்டு நிழற்படத்திற்கு முத்தம் கொடுக்கும் அபாக்கிய சாலிகள் ! தொலைதூரத்தில் இருந்து கொண்டே தொலைபேசியிலே குடும்பம் நடத்தும் தொடர் கதைகள் ! கடிதத்தை பிரித்தவுடன் கண்ணீர் துளிகளால் கானல் நீராகிப் போகும் மனைவி எழுதிய எழுத்துக்கள்! ஈமெயிலிலும் இண்டர்நெட்டிலும் இல்லறம் நடத்தும் கம்ப்யூட்டர் வாதிகள் ! நலம் நலமறிய ஆவல் என்றால் பணம் பணமறிய ஆவல் என கேட்கும் . டி . எம் . மெஷின்கள் ! பகட்டான வாழ்க்கை வாழ பணத்திற்காக வாழக்கையை பறி கொடுத்த பரிதாபத்துக்குரியவர்கள் ! . சி . காற்றில் இருந்துக் கொண்டே மனைவியின் மூச்சுக்காற்றை முற்றும் துறந்தவர்கள் ! வளரும் பருவத்திலே வாரிசுகளை வாரியணைத்து கொஞ்சமுடியாத கல் நெஞ்சக்காரர்கள் ! தனிமையிலே உறங்கும் முன் தன்னையறியாமலே தாரை தாரையாக வழிந்தோடும் கண்ணீர் துளிகள் ! அபஷி என்ற அரபி வார்த்தைக்கு அனுபவத்தின் மூலம் அர்த்தமானவர்கள் ! உழைப்பு என்ற உள்ளார்ந்த அர்த்தத்தை உணர்வுபூர்வமாக உணர்ந்தவர்கள்! முடியும் வரை உழைத்து விட்டு முடிந்தவுடன் ஊர் செல்லும் நோயாளிகள் ! கொளுத்தும் வெயிலிலும் குத்தும் குளிரிலும் பறக்கும் தூசிகளுக்கும் இடையில் பழகிப்போன ஜந்துகள்! பெற்ற தாய்க்கும் வளர்த்த தந்தைக்கும் கட்டிய மனைவிக்கும் பெற்றெடுத்த குழந்தைக்கும் உற்ற குடும்பத்திற்கும் இடைவிடாது உழைக்கும் தியாகிகள் !

மெட்ரிக் பள்ளி துவங்க என்ன செய்ய வேண்டும்?

பொதுவாக பள்ளிகள், கல்லூரிகள் போன்ற கல்வி நிறுவனங்கள் துவங்க தனி நபர்களுக்கோ வணிக நிறுவனங்களுக்கோ அனுமதி வழங்கப்படுவதில்லை. இதனால் கல்வி நிறுவனங்கள் துவங்க விரும்புபவர்கள் முதலில் ஒரு அறக்கட்டளை (Trust) அல்லது சங்கம் (Society) ஒன்றைத் துவங்கி அதற்கான அலுவலகம் அமைக்கப்பட வேண்டும். அதை மத்திய/மாநில அரசு பதிவு விதிகளின்படி மாவட்டப் பதிவாளர் / சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும். இதில் அறக்கட்டளை அல்லது சங்கத்தின் அமைப்பு, நோக்கம், செயல்பாடுகள் மற்றும் அதற்கான விதிமுறைகள் தெரிவிக்கப்பட வேண்டும். இந்த செயல்பாட்டில் கல்வி நிறுவனங்கள் துவங்குவதற்கான நோக்கம் குறிப்பிட்டிருக்க வேண்டும்.

தமிழக அரசு விதிகளின்படி, மெட்ரிக் பள்ளி துவங்குவதற்கு ஊராட்சிப் பகுதியாக இருந்தால் 3 ஏக்கர் இடமும், பேரூராட்சிப் பகுதியாக இருந்தால் 1 ஏக்கர் இடமும், நகராட்சிப் பகுதியாக இருந்தால் 55 சென்ட் இடமும் அறக்கட்டளை அல்லது சங்கம் பெயரில் கிரயமாகப் பெற்றிருக்க வேண்டும் அல்லது குறைந்தது 50 வருட காலத்திற்கு குத்தகைக்குப் பெற்றிருக்க வேண்டும். இதற்கான பத்திரம் பத்திரப் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

இந்த இடத்தில் உள்ளாட்சி அமைப்பில் கட்டிட வரைபட அனுமதி பெறப்பட்டு பள்ளிக்கான அனைத்து வசதிகளுடனும் கட்டிடங்கள் கட்டப்பட்டு இருக்க வேண்டும். இந்த கட்டிடத்திற்கு கட்டிட உறுதிச் சான்றினை அரசு அங்கீகரித்துள்ள கட்டுமானப் பொறியாளரிட்ம் பெற வேண்டும். அதன்பின்பு அந்த பகுதி வட்டாட்சியரிடம் கட்டிடத்திற்கான உரிமம் பெற வேண்டும். மேலும் இந்த கட்டிடத்தில் குடிநீர் மற்றும் கழிப்பிட வசதிகள் செய்யப்பட்டிருப்பதற்கான சுகாதாரச் சான்றிதழை மாவட்ட சுகாதாரப் பணி இணை இயக்குனர் அலுவலரிடம் பெற வேண்டும். இதுபோல் கட்டிடத்தில் தீ விபத்துத் தடுப்புக் கருவிகள் மற்றும் பாதுகாப்புக் கருவிகள் அமைக்கப்பட்டு அதற்கான தீயணைப்புத்துறைச் சான்றிதழை கோட்ட தீயணைப்பு அலுவலரிடம் பெற வேண்டும்.

மேலும் அருகிலுள்ள துவக்க நடுநிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களிடம் மெட்ரிக் பள்ளி துவங்க தடையில்லாச் சான்றிதழ்கள் பெற வேண்டும். இது போல் மெட்ரிக் பள்ளி துவங்குவதற்கு விண்ணப்பிக்கும் போது முதலில் 1 முதல் 6 வகுப்புகள் மட்டும் துவக்க அனுமதி வழங்கப்படும் என்பதால் அந்த வகுப்புகளை நடத்த அறக்கட்டளை அல்லது சங்கத்திற்குப் போதுமான நிதி ஆதாரம் இருக்கிறது என்பதற்குச் சான்றாக அறக்கட்டளை அல்லது சங்கத்தின் பெயரில் வகுப்புக்கு ரூ20000/- வீதம் ஆறு வகுப்புகளுக்கு ரூ120000/- குறைந்தது மூன்று ஆண்டுகளுக்கு நிரந்தர வைப்புத் தொகையாக அரசுடமையாக்கப்பட்ட / பட்டியலிடப்பட்ட வங்கியில் செலுத்தி அதற்கான ரசீதைப் பெற்றிட வேண்டும். இது போல் அறக்கட்டளை அல்லது சங்கம் பெயரில் அரசுடமையாக்கப்பட்ட / பட்டியலிடப்பட்ட வங்கியில் சேமிப்புக் கணக்கு ஒன்று துவங்கி அதில் ஒரு வருடம் பள்ளி நடத்துவதற்குத் தேவையான பணத்தை முதலீடு செய்ய வேண்டும்.

அதன் பிறகு மெட்ரிக் பள்ளி துவங்க விரும்புபவர்கள் அந்த மாவட்டத்திற்கான மெட்ரிக் பள்ளிகளின் ஆய்வாளர் அலுவலகத்தில் அதற்கான விண்ணப்பப் படிவத்தைப் பெற்று பூர்த்தி செய்து மேற்காணும் சான்றிதழ்களின் நகல்களை இணைத்து மெட்ரிக் பள்ளிகளின் ஆய்வாளருக்கு ஒரு படிவமும், மெட்ரிக் பள்ளிகளின் இயக்குனருக்கு ஒரு படிவமும் என்று இரண்டு படிவங்களை மெட்ரிக் பள்ளி ஆய்வாளரிடம் அளிக்க வேண்டும். இதற்கான விண்ணப்பக் கட்டணமாக ரூ1000/, ஆய்வுக் கட்டணம் ரூ2500/- மற்றும் நிர்வாகத்தின் பங்குத் தொகையாக ரூ10000/- ஆகியவை அரசுக் கருவூலத்தில் அவர்கள் குறிப்பிடும் கணக்கில் செலுத்திய உண்மைச் சலானை மெட்ரிக் பள்ளிகளின் இயக்குனருக்கான படிவத்திலும் நகலை மெட்ரிக் பள்ளி ஆய்வாளருக்கான படிவத்திலும் இணைக்க வேண்டும். இது போல் வங்கியில் செலுத்திய நிரந்தர வைப்புத்தொகை ரசீது நகல், வங்கியின் சேமிப்புக் கணக்கு நகலும் இணக்கப்பட வேண்டும்.

இது தவிர பள்ளிக்கான விளையாட்டு மைதானம், நூலகம் மற்றும் ஆய்வுக்கூடங்கள் போன்றவை அமைக்கப்பட்டிருக்க வேண்டும். இதுபோல் பள்ளிக்கான முதல்வர் நியமிக்கப்பட்டிருக்க வேண்டும். பள்ளிக்குத் தேவையான, தகுதி உடைய ஆசிரியர்கள் நியமிக்கத் தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும். இதற்கான விபரங்களும் விண்ணப்பத்தில் இணைக்கப்பட வேண்டும்.

இவை அனைத்தும் சரியாக இருக்கும் நிலையில் மெட்ரிக் பள்ளிகளின் ஆய்வாளர் பள்ளிக் கட்டிடத்திற்கு நேரடியாக வந்து பார்வையிடுவதுடன் தாங்கள் அளித்த விபரங்கள் அனைத்தும் உண்மையா? என்பது குறித்து ஆய்வு செய்வார். அதன் பின்பு உங்கள் பள்ளிக்கான விபரங்கள் அனைத்தும் சரியாக இருக்கும் நிலையில் மெட்ரிக் பள்ளிகளின் இயக்குனருக்கான உங்கள் பள்ளியின் விண்ணப்பப் படிவத்தை, அவருடைய பரிந்துரையுடன் மெட்ரிக் பள்ளிகளின் இயக்குனருக்கு மேற்பார்வைக்காக அனுப்பி வைப்பார். அங்கு விண்ணப்பத்தை ஆய்வு செய்து விதிமுறைகளின்படி சரியாக இருக்கிறது என்று கருதும் நிலையில் முதலில் மெட்ரிக் பள்ளி துவங்குவதற்கான அனுமதி வழங்கப்படுகிறது. இந்த அனுமதியைக் கொண்டு மெட்ரிக் பள்ளியைத் துவங்கி நடத்தலாம். பள்ளி துவங்கப்பட்ட பின்பு சில மாதங்களுக்குள் பள்ளிக்கு தற்காலிக அங்கீகாரம் வழங்கக் கோரி அதற்கான விண்ணப்பப் படிவத்தை மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் அலுவலகத்தில் பெற்று மேற்காணும் வழியில் மீண்டும் விண்ணப்பித்துப் பெற வேண்டும். அதன் பிறகு வகுப்பு உயர்விற்கு 7 முதல் 8 வகுப்புகளுக்கும், 9 மற்றும் 10 வகுப்புகளுக்கும், மேல்நிலை வகுப்புகளுக்கும் மேற்காணும் வழிமுறையிலேயே அந்தந்த வகுப்புகளுக்குத் தேவையான வசதிகள் செய்யப்பட்டு தனித்தனியாக விண்ணப்பித்து அதன் பிறகு அனுமதி பெற்றுக் கொள்ளலாம்.

தோழி 
புதைனா
நன்றி- லெப்பைகுடிகாடு.காம்