நஞ்சையும் புஞ்சையும் கொஞ்சி விளையாடும் தஞ்சைத் தரணியில் சமூக ஒற்றுமைக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழும் எங்கள் ஊர் 'திருப்பந்துருத்தி' இணைய உலகில் இப்போது அடியெடுத்து வைக்கிறது.

ஒற்றுமையுடனும் சகோதரத்துவத்துடனும் வாழும் முஸ்லிம்கள், இந்துக்கள், கிறித்தவர்கள் என எமதூர் மக்கள் அனைவருக்கும் சாதி மத பேதமின்றி சேவை செய்யும் நோக்கத்தில் இந்த வலைப்பதிவு உருவாக்கப்பட்டுள்ளது
திருப்பந்துருத்தி மண்ணில் பிறந்து திக்கெட்டும் பரந்து வாழும் எம் மண்ணின் மைந்தர்களை 'திருப்பந்துருத்தி' வலைப் பதிவு அன்புடன் வரவேற்கிறது.

தொடர்புக்கு-thiruppanthuruthi@gmail.com

தமிழ்நாட்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆரம்பம்

மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி தமிழ்நாட்டில் நாளை தொடங்கி 28-ந்தேதி வரை நடைபெறுகிறது.  இந்த பணியில் 11/2 லட்சம் பேர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இதே காலகட்டத்தில் இந்தியா முழுவதும் மக்கள் தொகை(சென்சஸ்) கணக்கெடுப்பு நடைபெற உள்ளது.

இது தொடர்பாக மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குனர் எஸ்.கோபாலகிருஷ்ணன்     நிருபர்களிடம் கூறியதாவது:-

சென்சஸ்-2011-க்கான மக்கள்தொகை கணக்கெடுப்பு பணி நாடு முழுவதும் நாளை (9-ந்தேதி) தொடங்கி 28-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த பணிக்காக  தமிழ்நாட்டில் 20 லட்சத்து 47 ஆயிரம் வட்டங்கள் உருவாக்கப்பட்டு 24 கோடி வீடுகளுக்கு சென்று கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. இதற்காக ரூ.2ஆயிரத்து 200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்காக தமிழ்நாட்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஆசிரியர்கள் உள்பட 11/2 லட்சம் பேர் ஈடுபட இருக்கிறார்கள். கணக்கெடுப்பு பணியில் ஈடுபடும் ஒவ்வொருவரும் 150 முதல் 200 குடும்பங்களில் மக்கள்தொகையை கணக்கெடுப்பார்கள். ஒரே கால கட்டத்தில் இந்த கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.

இந்த கணக்கெடுப்பின்போது குடும்பத்தில் உள்ளவர்களின் பெயர், சாதி, பிறந்ததேதி, வயது, தாய்மொழி, திருமணத்தின்போது வயது, மதம், ஷெட்யூல் வகுப்பு, எழுத்தறிவு நிலை, கல்வி நிறுவனங்கள் செல்பவர்களின் எண்ணிக்கை, தெரிந்த மொழிகள், மாற்றுத்திறனாளியா?அதிக பட்சம் படித்தது உள்பட 29 வகையான தகவல்கள் திரட்டப்பட இருக்கிறது.

இந்த கணக்கெடுப்பு பணி சென்னை மாநகராட்சி பகுதிகளில் ஆணையாளர் முன்னிலையில் நடைபெற இருக்கிறது. தமிழகம் முழுக்க 150 நகராட்சிகளில் ஆணையாளர்கள் கணக்கெடுப்பு பணிக்கான பொறுப்பாளராக செயல்படுவார்கள், மற்ற இடங்களில் வட்டாட்சியர்கள் தலைமையில் கணக்கெடுப்பு பணி நடைபெற இருக்கிறது.

மக்கள் தொகை கணக்கெடுப்பில் முதல் கட்ட பணி கடந்த ஆண்டு ஜுன், ஜுலை மாதங்களில் நடைபெற்றது. அப்போது வீட்டுப்பட்டியல்கள், வீடுகள் கணக்கெடுப்பு பணி முடிக்கப்பட்டது. இதில், எங்கெங்கு மக்கள் வசிக்கின்றனர்? எவ்வளவு வீடுகள் உள்ளன?. மின்சார வசதி, குடிநீர் வசதி முதலியவை கணக்கிடப்பட்டன. அதனடிப்படையில்  நடைபெற இருக்கும் இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கு காலநீட்டிப்பு இல்லை.

ஒரு படிவம் 8 பேர் கொண்ட குடும்பத்திற்கு பயன்படுத்தப்படும்.   அதற்கும் மேற்பட்டவர்கள் இருந்தால், கூடுதல் படிவம் பயன்படுத்தப்படும்.

கணக்கெடுப்பு பணி நடைபெறும்போது அந்த வீட்டில் இருப்பவர்கள் எவ்வளவு நாட்களாக உள்ளனர், எங்கிருந்து வந்தனர் போன்ற விவரங்கள் கேட்கப்படும். குடும்பத்தில் இருப்பவர்களில் யாராவது ஒருவர் வெளியூரில் இருந்தால், அவரதுபெயர் சேர்க்கப்படமாட்டாது.  மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது பெறப்படும் தனிப்பட்ட தகவல்கள் அனைத்தும் ரகசியமாக வைக்கப்படும். எனவே தயக்கமில்லாமல் அனைத்து விவரங்களையும் பொதுமக்கள் தெரிவிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

கணக்கெடுப்பு பணிக்கு பெரும்பாலும், ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளதால், அவர்கள் தங்களது வசதிக்கு ஏற்ப கணக்கெடுப்பு பணியில் ஈடுபடுவார்கள். கணக்கெடுப்பு பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளதால், அடையாள அட்டை உள்ள நபர்களிடம் மட்டுமே பொதுமக்கள் தகவல் தர வேண்டும்.

கணக்கெடுப்பு பணிக்கு வரும் அலுவலர்களிடம் பொதுமக்கள் முழுமையான  ஒத்துழைப்பு தந்து  தகவல்களை தர வேண்டும். ஒத்துழைப்பு தர மறுத்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

கணக்கெடுப்பின் இறுதி நாளான பிப்ரவரி 28-ந் தேதி மாலை 6 மணிக்கு மேல் நடைபாதையில் வசிப்பவர்கள் மற்றும் வீடற்றவர்கள் குறித்த கணக்கெடுக்கப்படும். மேற்கண்ட தகவல்களை  இயக்குனர் கோபாலகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறினார் நன்றி: இந்நேரம்.காம்
.http://www.inneram.com/2011020813437/senses-starts-in-tamilnadu?utm_source=feedburner&utm_medium=email&utm_campaign=Feed%3A+inneram+%28%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D.%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%29

0 comments:

கருத்துரையிடுக