வளைகுடா செந்தமிழ்ச் சங்கம் (வசெந்தம்) குழுமத்தில் நண்பர் சீ.ந.ராஜா
எடுத்துவைத்த தமிழ்நாட்டு பழமொழிகள்:
ஒரு ஆவணச் சேமிப்பின் எண்ணத்தில் இங்கு பதிகிறேன்.
தமிழ்நாட்டுப் பழமொழிகள்
அ
அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.
அச்சாணி இல்லாத தேர், முச்சானும் ஓடாது.
அறிவாளிகள் கூட்டம் உயிருள்ள நூல் நிலையம்.
அசையாத மணி அடிக்காது
அலங்காரம் இல்லாமல் அழகு இருப்பதில்லை.
அரண்மனை வாயிற்படி அதிகமாக வழுக்கும்.
அறுகல் கட்டையும் ஆபத்திற்கு உதவும்.
அழகும், மணமுள்ள பூக்களும் சாலையோரத்தில் வாழாது.
அறிவின் அடையாளம் இடைவிடா முயற்சி.
அதிர்ஷ்டம் அயர்ந்த நித்திரையிலும் வரும்.
அழகுள்ள பெண்ணையும் கிழிந்த ஆடையையும் யாரேனும் பிடித்து இழுத்து விடுவார்கள்.
அமைதி சாந்தத்தை உருவாக்கும். செல்வம் பெயரை உண்டாக்கும்.
அழகு வல்லமை உடையது. பணம் சர்வ வல்லமை உடையது.
அலை அடித்தால் பிரார்த்தனை துவங்கும். கரை சேர்ந்தால் பிரார்த்தனை நீங்கும்.
அதிர்ஷ்டம் ஒருவனுக்குத் தாய். மற்றவனுக்கு மாற்றாந்தாய்.
அழகான பெண் தலைவலி, அழகற்றவள் வயிற்றுவலி.
அழகும் மடமையும் பழைய கூட்டாளிகள்.
அடுப்பங்கரையில் கற்றதையெல்லாம் பிள்ளை பேசும்.
அறிவார் ஐயம் கொள்வார்; அறியார் ஐயமே கொள்ளார்.
அரைத்துளி அன்புகூட இல்லாமல் ஆயிரம் சட்டங்கள் இயற்றலாம்.
அன்பே கடவுள்.
அன்பு மெலிந்து போனால், தவறு தடியாகத் தெரியும்.
அதிகப் பணப்புழக்கம் இளைஞனைக் கெடுக்கும்.
அசட்டுத் தனங்கள் எண்ணிலடங்காதவை; அறிவு ஒன்றே ஒன்றுதான்.
அடிப்பதும் அடிபடுவதும்தான் வாழ்க்கை.
அரை குறை வேலையை முட்டாளிடம் காட்டாதே!
அண்டை அயல் தயவு இன்றி எவரும் வாழ முடியாது.
அன்பும், மனைவியும் அமைவதே வாழ்க்கை.
அறிவாளிகள் கடிதங்களை ஆரம்பத்திலிருந்தே படிப்பார்கள்.
அழகு, அடைத்த கதவுகளை திறக்கும்.
அதிகப் பேச்சும், பொய்யும் நெருங்கிய உறவினர்.
அதிகப் பணிவும் அகம்பாவம் ஆகலாம்.