உலக உயிர்கள் எதனால் வாழ்கிறதோ தோன்றியதோ
,ஆனால் அனைத்தும் தக்கென பிழைத்தல் எனும் அடிப்படை தியரியை வைத்து தான்
தோன்றின . தம்மை பாதுகாத்துக்கொள்ள , எச்சரிக்கையாக இருக்க தெரிந்த
உயிர்கள் பிழைக்கும் வாய்ப்புகள் அதிகம் .
அண்மையில்
நடந்த மேன்களூர் விமான விபத்தில் பல உயிர்களை தீ விழுங்கியது . அதில் அந்த
விமானத்தை தவறவிட்டவர்களுடன் மொத்தம் 15 பேர் உயிர் தப்பினர் . உயிர்களின்
பெறுமதி மதிப்பில்லை . அதில் ஒரு அறுபது பேராவது தப்பியிருந்தாலும்
மகிழ்ச்சி தான் . நம் அரசியல்வாதிகள் அதிகாரிகளின் நோக்கம் முழுக்க யார்
மீது யார் பழியை போட்டு பிழைக்கலாம் என்பதே .அது தான் இப்போதும் நடக்கிறது
. அதனால் பயன் என்று பார்த்தால் ஒன்றும் இல்லை .
இனி
எவ்வாறு இவ்வாறான விபத்துகளை எதிர் கொள்கிறோம் என்பதே முக்கியம் . இது
குறித்து எவராலும் விழிப்புணர்வு நடவடிக்கை கொண்டு செல்லப்பட்டதாக
காணவில்லை . விமானப்பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு அவசியம். 1 .2
மிலியன் விமானங்களுக்கு ஒன்று என விபத்து நடந்தாலும் எச்சரிக்கை மிகவும்
முக்கியம் .
இதுவரை நடந்த அகோர விமான விமான விபத்துக்களில் இருந்து 56 % ஆன
உயிர்கள் காப்பற்றப்பட்டிருக்கின்றன . சிலவை தவிர்க்கமுடியாதாயினும் உயிர்
பிழைக்கும் விகிதத்தை எம் இறுதி நேர நடவடிக்கைகளால் அதிகரிக்கலாம்.